← Back to list
மே 18: முஹிதீன் VS மகாதீர்?
May 09, 2020
பிரதமர் Tan Sri Muhyiddn Yassin-னுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர மக்களவை சபாநாயகர் அனுமதி அளித்திருக்கிறார்.
புகைப்படம்: The Malaysia Online
ஆனால், வரும் மே 18-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் போது, COVID-19 பரவல் தடுப்பு நடவடிக்கையாக அவை நடவடிக்கைகள் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், அத்தீர்மானம் அன்றைய தினமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமா என தெரியவில்லை.
Tan Sri Muhyiddin மக்களவையில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறி முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad அத்தீர்மானத்தைத் தாக்கல் செய்ய அனுமதி கேட்டிருந்தார்.
இருவருமே BERSATU கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுமதி இல்லாதாவர்கள் திருப்பி அனுப்படுவார்கள்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில் சொந்த ஊரிலேயே சிக்கிக் கொண்டவர்கள் வீடு திரும்ப கண்டிப்பாக காவல் துறையின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
Gerak Malaysia செயலி வாயிலாக அனுமதி பெற்றவர்கள் அல்லது காவல் துறையின் அனுமதி கடிதத்தை வாங்கியர்கள் மட்டுமே மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அனுமதி கொண்டிருக்காதவர்கள், வந்த வழியே திருப்பி அனுப்படுவார்கள் என Bukit Aman தெரிவித்தது.
நாடு முழுவதும் பொது மக்கள் மே 7ஆம் தேதி தொடங்கி, மே 10ஆம் தேதி அதாவது நாளை வரை, பயண அட்டவணையை பின்பற்றி சொந்த வீடுகளுக்கு திரும்பலாம் என இதற்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆபத்து அவசரம் இருந்தாலோ அல்லது காவல் துறை அனுமதியைப் பெற்றால் ஒழிய, திங்கட்கிழமை தொடங்கி மாநிலங்களுக்கிடையே பயணிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலம் விட்டு மாநிலம் பயணிப்பவர்கள், காரினுள் இருந்தாலும் கூட, சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலைப் பின்பற்றி சுவாசக் கவசத்தை அணியுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
இராணுவக் கட்டுப்பாடா?
இந்தியாவில் COVID-19 சம்பவங்கள் 56 ஆயிரத்தை எட்டியிருக்கின்றன.
நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கு மூவாயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகின.
இவ்வேளையில் மும்பையில் COVID-19 பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, அம்மாநகர் முழு இராணுவக் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக கூறப்படுவதை Maharashtra மாநில அரசு மறுத்துள்ளது.
புகைப்படம்: WION
இந்தியாவிலேலே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக அது விளங்குகிறது.
அங்கு மொத்தமாக இதுவரை சுமார் 20 ஆயிரம் நோய் தொற்று சம்பவங்கள் பதிவாகிய வேளை, நேற்று ஒரு நாளில் மட்டும் 37 பேர் மரணமடைந்தனர்.
Maharashtra-வில் COVID-19 கிருமிக்கு பலியானோரின் எண்ணிக்கை 731 பேராகும்
இவ்வேளையில் தமிழகத்தில் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தொட்டிருக்கிறது.
மரண எண்ணிக்கை 40-தை எட்டியுள்ளது.
இத்தாலி நிலவரம்!
இத்தாலியில் பொது மக்களின் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் அங்கு COVID-19 மரண எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இதுவே ஆக அதிக எண்ணிக்கையாகும்.
உலகில் அமெரிக்கா, UK ஆகிய நாடுகளுக்கு அடுத்து ஆக அதிக மரணச் சம்பங்களைப் பதிவுச் செய்துள்ள நாடாகவும் இத்தாலி திகழ்கிறது.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather