← Back to list
புதிதாக எங்கும் EMCO இல்லை!
May 05, 2020
நாட்டில் பதிவான புதிய Covid-19 சம்பவங்களைக் காட்டிலும் குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கின்றது.
மேலும் 83 பேர் பூரண நலமடைந்துள்ளனர்.
புதிதாக 30 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஒருவர் Covid-19னுக்குப் பலியாகி மொத்த மரண எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, சுகாதார அமைச்சின் பணியாளர்களின் வேலை அட்டவணையில் மாற்றம் செய்யப்படும்.
சுகாதாரத் தலைமை இயக்குனர் அதனைத் தெரிவித்தார்.
CMCO அமலுக்கு வந்த முதல் நாளில் பொதுவில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது.
சாலைகளில் வாகனங்கள் அதிகம் காணப்பட்டாலும், நிலைமை சீராகத்தான் இருந்ததாகத் தற்காப்பு அமைச்சர் கூறினார்.
வணிக வளாகங்களும் நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறையைப் பின்பற்றியதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில், CMCO அமலாக்கத்தைக் கண்காணிக்க PDRM சிறப்பு பணிக் குழுவை ஏற்படுத்தியிருக்கிறது.
CMCO அமலாக்கத்தால், தனிநபர் வாகனங்கள் இரவு 10 மணி வரை மட்டுமே பயணிக்க முடியும் என்ற விதிமுறை இனி இல்லை.
எனினும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை இன்னமும் அமலில் இருக்கிறது.
நாட்டில் புதிதாக எந்த பகுதியிலும் MCO கடுமையாக்கப்படவில்லை.
Selayangங்கில் Taman Wilayah மற்றும் Taman Desa Bakti; Chow Kitட்டில் Jalan Raja Bot சுற்று வட்டாரம் என மூன்று பகுதிகளில் EMCO அமலுக்கு வந்துள்ளதாக முன்னதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
நாடு முழுவதும் Covid-19 கிருமித் தொற்று தொடர்பில் புதிய சம்பவங்கள் ஏதும் பதிவு செய்யாத மாவட்டங்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.
பெர்லிஸ், கெடா, கிளந்தான், பேரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து பினாங்கிலும் புதிய சம்பவங்கள் இல்லை.
கூடுதல் சம்பவங்களுடன் Petaling மீண்டும் சிவப்பு மண்டலப் பகுதிகள் பட்டியலில் சேர்ந்துள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக அம்னோ தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidiட்டின் மகளுக்கு அவரது கணவருக்கும் தலா 800 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அமைச்சர் ஒருவரையும் துணையமைச்சர் ஒருவரையும் அவர்களது அலுவலகங்களில் சந்தித்த புகைப்படத்தை பதிவேற்றியதை அடுத்து அவ்விருவரும் பலரது கண்டனத்திற்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather