← Back to list
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
May 05, 2020
சுவாசக் கவசம் அணிவது நல்லது!
புதிய வழமைகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறைகள் SOP-யை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் COVID-19 கோறனி நச்சில் தொற்றை முறியடிக்கலாம்.
சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah அதனை மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.
அதே சமயம், சுவாசக் கவசங்கள் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், நடப்பு சூழ்நிலையில், மக்கள் அதனை அணிவதே நல்லது என்றும் அவர் சொன்னார்.
குறிப்பாக பொது மற்றும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்பவர்கள் அதனை அணிய அறிவுறுத்தப்படுவதாக Dr Noor Hisham சொன்னார்.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 2ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், நாட்டில் நேற்று COVID-19 புதிய சம்பவங்கள் எண்ணிக்கை 55-ஆக பதிவாகியது.
71 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும்!
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, 5ஆம் கட்ட ஆணையாக கருதப்படுகின்றது.
எனவே, இதுவரை இருந்த 4ஆம் கட்ட MCO ரத்தாகி, இந்த CMCO நீடிக்கும்.
அனைத்து தரப்பினரும் இந்த CMCO-வை பின்பற்ற வேண்டும் என தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து மாநிலங்களும், அரசாங்கத்தின் இம்முடிவுக்கு கட்டுப்படும் என தாம் நம்புவதாகவும் Datuk Seri Ismail Sabri Yaakob கூறினார்.
இவ்வேளையில், அனைத்து துறை சார்ந்த அந்நிய நாட்டு தொழிலாளர்களும் COVID-19 கிருமித் தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பது அரசாங்கம் கட்டாயமாக்கியிருக்கின்றது.
அப்பரிசோதனைக்கான செலவினங்களை அவர்களது முதலாளிமார்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் Datuk Seri Ismail Sabri கூறினார்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
CMCO-வுக்கு முரணாக, பொருளாதார துறைகள் மீண்டும் செயல்பட அனுமதி மறுக்கும் மாநில அரசாங்கங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சம்பந்தப்பட்ட தொழில்துறையின் சட்ட நடவடிக்கையும் அதிலடங்கும் என அனைத்துலக வாணிக, தொழிலியல் அமைச்சு கூறியுள்ளது.
தொழில்துறைகளை மீண்டும் தொடங்கும் மத்திய அரசாங்கத்தின் முடிவு, சட்டப்பூர்வமானதே.
1989 முதல் அமுலில் இருந்து வரும், தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் அது குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்தது.
இதுவரை 6 மாநிலங்கள் பல்வேறு காரணங்களுக்காக தொழில் துறைகளை மீண்டும் தொடங்கவில்லை.
அவை சபா, சரவாக், பினாங்கு, பகாங், Kelantan மற்றும் கெடா ஆகும்.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather