Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மீண்டும் ஈரிலக்கத்திற்குக் குறைந்துள்ளன சம்பவங்கள்!

May 04, 2020


நாட்டில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் இரண்டு இலக்க எண்ணிற்குக் குறைந்துள்ளது.

கடந்த இரு நாட்களாக அவ்வெண்ணிக்கை நூற்றுக்கும் கூடுதலாக இருந்தது.

புதிதாக 55 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 71 பேர் Covid-19னில் இருந்து விடுபட்டு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய மரணம் ஏதும் பதிவாகவில்லை; மொத்த மரண எண்ணிக்கை 105 ஆகவே இருக்கின்றது.   

தங்களது விவேகக் கைப்பேசிகளில் My Sejahtera செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்வதை சுகாதார அமைச்சு வரவேற்கிறது.

அச்செயலி நாட்டில் Covid-19 குறித்து அண்மைய நிலவரங்களையும் விவரங்களையும் துல்லிதமாகக் கொடுப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.  

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO காலக் கட்டத்தில் 10 கிலோமீட்டருக்குள்தான் பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாடு இல்லை.

ஆயினும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இன்னமும் அனுமதி இல்லை என தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.

எந்தத் துறை மற்றும் தொழிலாக இருந்தாலும், அவற்றில் வேலைசெய்யும் அந்நிய நாட்டவர்களுக்கு Covid-19 பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அக்கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்க அது அவசியம்.  

நாடு முழுவதும் 9 மாவட்டங்கள் இன்னமும் சிவப்பு மண்டலப் பகுதிகள் பட்டியலில் இருக்கின்றன.

அவற்றில் KL, Lembah Pantaiயில் மிக அதிகமாக 220க்கும் அதிகமான Covid-19 சம்பவங்கள் உள்ளன.

சிலாங்கூரில் Gombak, Hulu Langat ஆகியவை மட்டுமே சிவப்பு மண்டலப் பகுதிகளாக உள்ளன.  

KL, Malayan Mansion, Selangor Mansion, Masjid India சுற்று வட்டாரப் பகுதி ஆகியவற்றில் கடுமையாக்கப்பட்டிருந்த MCO முடிவுக்கு வந்துள்ளது.

Selayangங்கில் சில பகுதிகளில் EMCO முடிவடைந்துள்ள நிலையில், சில இடங்களில் மே 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உயர்க்கல்விக் கழகங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 200க்கும் அதிகமான மாணவர்கள் இதுவரை சொந்த ஊர்களைச் சென்றடைந்துள்ளனர்.

மேலும் பலரை அனுப்பும் நடவடிக்கைகள் அட்டவணைப்படி தொடரப்படுவதாக உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்தது.

MRT ரயில் சேவைகள் அதிகரிக்கப்படலாம் என Prasarana அறிவித்துள்ளது.

நிபந்தனைக்குட்பட்ட MCO அமலுக்கு வந்துள்ள நிலையில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதைச் சுட்டிக் காட்டி அது அவ்வாறு கூறியது.

ஊழியர் சேமநிதி வாரியம் புதன்கிழமை முதல் சில மாநிலங்களில் தொகை மீட்பு மற்றும் i-Akaun செயல்பாட்டு அலுவல்களை மீண்டும் தொடக்கவிருக்கிறது.

ஆயினும் பினாங்கு, கெடா, கிளந்தான், பஹாங் ஆகிய மாநிலங்களில் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை அச்சேவைகள் இருக்காது என EPF கூறியது.  

தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather