← Back to list
BPN – இன்று கடைசி நாள்!
Apr 30, 2020
பெரும்பாலான சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவை!
நாட்டில் நேற்று புதிதாக பதிவான COVID-19 கிருமித் தொற்றுச் சம்பவங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டில் இருந்து வந்தவை.
நேற்று அத்தொற்றுக்கு ஆளான மொத்தம் 94 பேரில், 72 பேர், கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனிசியாவில் இருந்து திரும்பிய மாணவர்கள் என சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
ஆக நேற்றைய கணக்கின் படி, உள்நாட்டில் பரவிய சம்பவங்கள் எண்ணிக்கை வெறும் 22 மட்டுமே என, Datuk Dr Noor Hisham Abdullah சொன்னார்.
நேற்று 55 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனர்.
இதையடுத்து, அத்தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வேளையில், பள்ளிகள் உள்ளிட்ட இதர சமூக நலம் சார்ந்த துறைகளை மீண்டும் திறப்பதற்கு முன்பாக, பொருளாதார துறைகளை மீண்டும் செயல்பட அனுமதிப்பதி பற்றி சுகாதார அமைச்சு யோசிக்கின்றது.
அப்பொருளாதார துறைகள் செயல்படுவதற்கான தர செயல்பாட்டு நடைமுறை SOP தயாராக இருப்பதாக Dr Noor Hisham Abdullah சொன்னார்.
அவற்றை சம்பந்தப்பட்ட தொழில்துறைகள் சரியாக பின்பற்றினாலே போதும் என்றாரவர்.
இதனிடையே, ஏறக்குறைய 2 வாரங்களாக நாட்டில் COVID-19 புதிய சம்பவங்கள் குறைந்துள்ளன.
இக்காலக்கட்டம் தான் மருத்துவ முன் வரிசைப் பணியாளர்களுக்கு தேவையான ஓய்வை வழங்க சிறந்த நேரம் என்றும் Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
KL மருத்துவமனையில், COVID-19 கிருமித் தொற்று சம்பவங்களுக்கு மட்டும் கவனம் செலுத்தாமல், மற்ற மருத்துவ சிகிச்சைகளையும் அனுமதிப்பது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
உடற்பயிற்சிக்காக வெளியே செல்ல விரைவில் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படலாம்.
அதற்கும் தர செயல்பாட்டு நடைமுறை SOP-யை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றாரவர்.
அதன் தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு நிலவரத்தில், மிதமான அல்லது அறவே அறிகுறிகள் கொண்டிருக்காத COVID-19 நோயாளிகள், சிலாங்கூர் Serdang-கில் உள்ள மலேசிய விவசாய கண்காட்சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள் சிகிச்சை மையத்திற்கு மாற்றப்படுவார்கள்.
கொரோனா கிருமித் தொற்று சம்பவங்களை கையாளும் முக்கிய மருத்துவமனைகளில், மருத்துவப் பணியாளர்களின் வேலை பளுவை குறைக்க அவ்வாறு செய்யப்படுகின்றது.
BPN – இன்று கடைசி நாள்!
தேசிய பொருளாதார பரிவுமிக்க ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், உதவிக்கு புதிதாக விண்ணப்பிக்கவும், மேல்முறையீடு செய்யவும் இன்று தான் கடைசி நாள்.
அப்புதிய விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகள் மே மாதம் தொடங்கி பரிசீலிக்கப்படும்.
அங்கீகரிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான உதவி நிதி, மே மாதத்திலேயே வழங்கப்படும் என, உள்நாட்டு வருவாய் வாரியம் LHDN தெரிவித்துள்ளது.
பொய்த் தகவல்!
SPM தேர்வுக்கான புதிய தேதிகள் எனக் கூறி பகிரப்பட்டு வரும் தகவல் பொய்யானது என கல்வி அமைச்சு கூறியுள்ளது.
நீங்கள் பெறும் தகவல் உண்மையானதா, இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather