← Back to list
பச்சை மண்டலப் பகுதியில் புதிய SOP!
Apr 28, 2020
Covid-19னில் இருந்து இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய சம்பவங்களை விட மீண்டும் கூடுதலாக உள்ளது.
மேலும் 75 பேர் பூரண நலமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
புதிதாக 31 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றையும் சேர்த்து இதுவரை மொத்தம் ஐயாயிரத்து 851 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஒருவர் Covid-19னுக்குப் பலியாகியிருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை நூறாக உயர்ந்துள்ளது.
சுகாதாரத் தலைமை இயக்குனர் அத்தகவல்களை வெளியிட்டார்.
Covid-19 சம்பவங்கள் அறவே இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் தளர்த்த அரசாங்கம் முடிவு செய்தால், அதற்காக புதிய தர செயல்பாட்டு நடைமுறை SOP வரையப்பட்டு வருகிறது.
அந்த SOPயை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
அதனை தேசிய பாதுகாப்பு மன்றம் MKN தயார் செய்து வருவதாக தற்காப்பு அமைச்சு கூறியது.
நாடு முழுவதும் Covid-19 சம்பவங்கள் அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளின் எண்ணிக்கை 12க்குக் குறைந்துள்ளது.
பச்சை மண்டலப் பகுதிகளின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.
சம்பவங்கள் அறவே இல்லாத மாநிலமாக பெர்லிஸ் தொடர்ந்து விளங்குகிறது.
KL, தொடர்ந்து அதிக சம்பவங்களைக் கொண்டுள்ள இடமாகத் திகழ்கிறது.
MCOவைத் தொடர்ந்து உள்நாட்டு உயர்க்கல்விக் கழகங்களில் சிக்கிக் கொண்ட மாணவர்களில் 80க்கும் அதிகமானோர் இன்றிரவு வட பகுதிகளில் இருந்து மத்தியப் பகுதிகளுக்குப் புறப்படுகின்றனர்.
நேற்றிரவு 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கெடா, பெர்லிஸ், பினாங்கு ஆகிய மாநிலங்களில் உள்ள தத்தம் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்று சேர்ந்தனர்.
பேரா, Lenggongங்கில் அண்மையில் MCOவை மீறி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட குற்றச்சாட்டை சுகாதாரத் துணையமைச்சரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதனை அடுத்து அவ்விருவருக்கும் majistret நீதிமன்றம் அதிகபட்சமாக தலா ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
அவ்விருவர் உட்பட மேலும் சிலர் பங்கேற்ற அந்நிகழ்வு தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் முன்னதாகப் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர், Selayangங்கில் PDRMமும் ராணுவமும் அந்நிய நாட்டவர்களைக் கைது செய்வதாகக் கூறிப் பகிரப்பட்டு வரும் காணொளி உண்மையானது அல்ல.
உண்மையில் அதிகாரிகள் MCO கடுமையாக்கப்பட்டுள்ள Selayang Baruவில் இருந்து அந்நிய நாட்டவர்களை தனிமைப்படுத்தல் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதாக Gombak காவல் துறை விளக்கியது.
நீங்கள் பெறும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
இம்மாதம் 26 ஆம் தேதி வரை அரசாங்கத்தின் பரிவுமிக்க உதவித் திட்டத்திற்காக 32 லட்சத்துக்கும் அதிகமான புதிய விண்ணப்பங்களும் மேல் முறையீடுகளும் பெறப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட உதவிநிதி விநியோகம் மே 4 ஆம் தேதி தொடங்கும் என நிதியமைச்சு தெரிவித்தது.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather