← Back to list
மே மாத மத்தியில் ஓர் இலக்க எண்ணை அடைய முடியும்!
Apr 29, 2020
ஓர் இலக்க எண்ணை அடைய முடியும்!
மே மாத மத்தியில், நாட்டில் COVID-19 கோறனி நச்சில் தொற்று சம்பவங்கள் ஓர் இலக்க எண்ணுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்த போதிலும், அந்த இலக்கை அடைவது, பொது மக்கள் புதிய வழமைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தான் உள்ளது என சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு வீட்டில் இருப்பது ஒன்றே பாதுக்காப்பானது என்பதையும் Dr Noor Hisham வலியுறுத்தினார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, தினசரி குறைவான சம்பவங்கள் பதிவாவதற்கு, பரிசோதனைகள் குறைவாக செய்யப்படுவதால் அல்ல.
நாளொன்றுக்கு வழக்கம் போல் 11ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
நேற்று நாட்டில் புதிதாக 31 சம்பவங்கள் மட்டுமே பதிவாகின.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்ட பின் மிகக் குறைந்த சம்பங்களை கொண்ட நாளாகவும் இது விளங்குகின்றது.
அத்தொற்றில் இருந்து நேற்று மேலும் 75 பேர் குணமடைந்தனர்.
பிறந்த குழந்தைக்கு Covid-19 கிருமித் தொற்று!
Covid 19 தொற்றுக்கு ஆளான தாய்க்குப் பிறந்த குழந்தைக்கும் அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah அதனைத் தெரிவித்தார்.
அக்குழந்தை கருவில் இருக்கும் போது அக்கிருமித் தொற்றியதா அல்லது பிறந்த பின் ஏற்பட்டதா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றாரவர்.
சட்டவிரோத குடியிருப்பு பகுதி!
Selangor, Batang Kali-யில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதோடு, காட்டுப் பகுதியில் சட்டவிரோத குடியிருப்பு பகுதி ஒன்றையும் அமைத்து அங்கு தங்கியதாக நம்பப்படும் 238 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிய அமைப்பொன்றின் பெயரைக் கூறி, தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட அவர்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என, சிலாங்கூர் காவல் துறையின் தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த தற்காலிக குடியிருப்பு பகுதி குறித்த விசாரணைகள் நீடிக்கின்றன.
2020 தோக்கியோ ஒலிம்பிக் குறித்த தகவல்!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அடுத்தாண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2020 Tokyo ஒலிம்பிக் போட்டி, குறிப்பிட்ட மாற்று தேதியிலும் நடைபெறாமல் போனால், அப்போட்டி முழுமையாக ரத்தாகலாம் என ஏற்பாட்டுக் குழு கூறியிருக்கின்றது.
FIFA ஆலோசனை!
Photo Credit: JSTOR Daily
COVID-19 கிருமித் தொற்று தொடர்ந்து பரவாமல் இருப்பதை உறுதிச் செய்ய, குறைந்தது செப்டம்பர் மாதம் வரையிலாவது கால்பந்தாட்டங்கள் தொடங்கப்படக் கூடாது என FIFA-வின் மருத்துவ தலைவர் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather