← Back to list
சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது!
Apr 23, 2020
நாட்டில் புதிதாகப் பதிவான Covid-19 சம்பவங்களைக் காட்டிலும் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைவாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 90 பேர் நலம் பெற்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
71 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒட்டு மொத்தத்தில் இதுவரை ஐயாயிரத்து 603 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனிடையே மேலும் இருவர் பலியாகி மொத்த மரண எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
MCO முடிவடைந்த பிறகும் நாட்டின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாகவே இருக்க வேண்டும்.
சுகாதாரத் தலைமை இயக்குனர் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
ரமலான் மாதத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் தர செயல்பாட்டு நடைமுறை SOPயில் பேரளவிலான மாற்றங்கள் இருக்காது.
சில சேவை நேரம் மட்டுமே நீட்டிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.
பொதுமக்களின் வசதிக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அவ்வகையில் பொது போக்குவரத்துச் சேவை மாலை நான்கு மணியில் இருந்து இரவு 10 மணி வரை இருக்கும்.
சந்தைகள் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே MCO காலக் கட்டத்தில் ரமலான் மாதத் தொடக்கத்தைக் கொண்டாட யாரும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாது என அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.
MCO அமலுக்கு வரும் முன்பே சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டவர்கள் நகரங்களுக்குத் திரும்ப அனுமதியளிப்பது இன்னமும் பரிசீலிக்கப்படுவதாக அவர் தெளிவுபடுத்தினார்.
மற்றொரு நிலவரத்தில், ரமலான் மாதத்தில் உணவகங்கள் நடப்பில் உள்ளது போல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோருக்காக அரசாங்கம் அறிவித்த உதவுச் சேவைகள் பலனளித்துள்ளதாக மகளிர் உதவிச் சங்கம் கூறியிருக்கிறது.
அண்மைய காலமாக குடும்ப வன்முறைகள் தொடர்பில் னுதவிக் கோரி தங்களுக்குக் கிடைக்கும் அழைப்புகள் அதிகரித்துள்ளதாக WAO தெரிவித்தது.
MCO முடிவடைந்த பிறகும் உதவிச் சேவைகளை அரசாங்கம் தொடர வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.
Kudatட்டில் Covid-19 பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி ஒருவர் காரில் தப்பியோடி விட்டதாகவும் காவல் துறை அவரைத் தேடி வருவதாகவும் வெளிவந்துள்ள தகவல் உண்மையில்லை.
சபா மாநில சுகாதாரத்துறை அவ்வாறு தெரிவித்துள்ளது.
நீங்கள் பெறும் தகவல் உண்மையா இல்லையா என்பதை Sebenarnya.my அகப்பக்கத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather