← Back to list
MCO: மலேசிய மருத்துவச் சங்கத்தின் கருத்து!
Apr 23, 2020
மலேசியாவில் COVID-19 கோறனி நச்சில் தொற்று சம்பவங்கள் தொடர்ந்து இரண்டு இலக்க எண்களில் பதிவாகி வருகின்றது.
இதற்கு மார்ச் 18ஆம் தேதி தொடங்கி தற்போது வரை அரசாங்கம் அமுல்படுத்தி வரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO முக்கிய பங்கு வகிக்கின்றது.
4ஆம் கட்டமாக இந்த MCO நீட்டிக்கப்படுமா இல்லையா என்ற முடிவை மலேசியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், முழுமையாக அல்லாமல் சில கட்டுப்பாடுகளுடன் இந்த MCO குறைக்கப்படலாம் என மலேசிய மருத்துவச் சங்கத்தின் தலைவர் DR N ஞானபாஸ்கரன் கருதுகின்றார்.
DR N ஞானபாஸ்கரன், மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர்
“வேகமாக தளர்வுகளை ஏற்படுத்தி விட்டால், இக்கிருமித் தொற்றுப் பரவல் அதிகரிக்கலாம்; எனவே, அரசாங்கம் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை அதிகளவில் குறைக்காமல், சில கட்டுப்பாடுகளுடன் குறைப்பார்கள் என்றே எனக்கு தோன்றுகின்றது” என அவர் ராகா செய்தியிடம் தெரிவித்தார்.
அதே சமயம், MCO மீது தளர்வுகள் வழங்கப்படுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் பற்றியும் அவர் பேசினார்.
“சில இடங்களில் அரசாங்கம் தளர்வுகளை ஏற்படுத்தினாலும், முக்கியமான சில விஷயங்களை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். முதலாவது, தனி சுகாதார தன்மையை நாம் பேணி காக்க வேண்டும். உடல் சுத்தம் குறிப்பாக கை சுத்தத்தைப் பாதுகாக்க வேண்டும். கூடல் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் தான், இக்கிருமித் தொற்று இன்னும் குறையும் என்பதை நாம் உணர வேண்டு. கவனக் குறைவாக இருந்தோமானால், இக்கிருமித் தொற்று மீண்டும் எழுந்தோம்பக்கூடிய வாய்ப்பிருக்கிறது” என்றாரவர்.
இதனிடையே, COVID-19-னுக்கு எதிரான நாட்டின் போராட்டத்திற்கு தோள் கொடுக்க பல தனியார் மருத்துவப் பணியாளர்களும், ஓய்வுப் பெற்ற மருத்துவர்களும் அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றி வருகின்றனர்.
அவர்களது பணி குறித்தும் DR ஞானபாஸ்கரன் இவ்வாறு விவரித்தார்.
“பலர் தங்களது சேவையை வழங்க முன்வந்தனர். அவர்களுக்கு பிரத்தியேகமாக 5 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டு செய்தவர்கள் முன்னிலை மருத்துவர்களாக இருந்தனர்; மற்றவர்கள் மருத்துவமனையின் உள்ளே பல்வேறு சேவைகள் செய்ய அமர்த்தப்பட்டனர். இந்த சேவையை வழங்கக்கூடிய முன்னிலை மருத்துவர்கள் யாராக இருந்தாலும், அதற்கான அந்தப் பயிற்சிகளைப் பெறாமல் அந்த சேவையை வழங்க முடியாது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.
ஆர்வமுள்ள தனியார் மருத்துவப் பணியாளர்கள், அரசு மருத்துவமனைகளில் சேவையாற்ற முன் வரலாம் என சுகாதார அமைச்சு முன்னதாக கேட்டுக் கொண்டிருந்தது.
நாட்டில் நேற்று புதிய சம்பவங்கள் எண்ணிக்கை தொடர்ந்து 2 இலக்க எண்களில் அதாவது 50ஆக பதிவானது; அத்தொற்றில் இருந்து 103 குணமடைந்தனர்.
அவ்வெண்ணிக்கை, மொத்த சம்பவங்களில் 62.4 விழுக்காடாகும்.
An article by: Sauriyammal Rayappan
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather