← Back to list
MCO - அடுத்த கட்ட முடிவு என்ன?
Apr 22, 2020
MCO: ஆறு அம்சங்கள் கவனிக்கப்படும்!
COVID-19 கோறனி நச்சில் தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO-வை நீட்டிப்பதா, இல்லையா என்பதை அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என சுகாதார துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah கூறுகின்றார்.
அதன் தொடர்பில் முடிவெடுக்க, ஆறு அம்சங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றாரவர்.
பாதுகாப்பு கட்டுப்பாடு, நடமாட்டக் கட்டுப்பாடு, சுகாதார நிலைக்கான ஆற்றல், புதிய வழமைகளை கடைப்பிடிக்கும் ஆற்றல், தடுப்பு நடவடிக்கைகளின் செயலாக்கம் ஆகியவை அதிலடங்குமென Dr Noor Hisham சொன்னார்.
அதே சமயம், மலேசியாவுக்குள் நுழைபவர்கள் வாயிலாக அத்தொற்று பரவாமல் இருப்பதை உறுதிச் செய்ய, எல்லைக் கட்டுப்பாட்டு ஆற்றலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மலேசியர்களில் ஏறக்குறைய 95 பேருக்கு அக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று ஐந்தாவது நாளாக COVID-19 சம்பவங்கள் 2 இலக்க எண்களில் பதிவானது.
நேற்று புதிதாக 57 சம்பவங்கள் உறுதியான வேளை, 3 மரணங்கள் நிகழ்ந்தன.
எனினும், ஐயாயிரத்திற்கும் அதிகமான மொத்த சம்பவங்களில் ஏறக்குறைய 61 விழுக்காட்டினர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
11 ஆயிரத்திற்கும் அதிகமான மலேசியர்கள் நாடு திரும்பி விட்டனர்!
இவ்வேளையில், கடந்த மாதத்தில் இருந்து இதுவரை 68 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்து 363 மலேசியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
இன்னும் ஏறக்குறைய 500க்கும் அதிகமான மலேசியர்கள், 22 நாடுகளில் சிக்கியிருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
மற்றொரு நிலவரத்தில், சிங்கப்பூரில் உள்ள மலேசியர்களில் ஏறக்குறைய 38 பேர் நேற்று பேருந்து வாயிலாக மலேசியா திரும்பியுள்ளனர்; அவர்களில் 27 பேர் கர்பிணிகள் ஆவர்.
MCO-வை மீறியவர்கள் கைது!
மார்ச் 18ஆம் தேதி MCO தொடங்கியதில் இருந்து இதுவரை Petaling Jaya மாவட்டத்தில் மட்டும் அந்த ஆணையை மீறியதற்காக, 484 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 90 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்தது.
இவ்வேளையில், Kota Damansara, Damansara ஆகியப் பகுதிகளை உட்படுத்திய சாலை தடுப்புச் சோதனைகளை அதிகரிப்பது பற்றியும் மாவட்ட காவல் துறை பரிசீலிக்கின்றது.
பொய்த் தகவல்!
ஏறக்குறைய ஒரு மாதக் காலக்கட்டத்தில், 205 பொய்த் தகவல்கள் அடையாளாம் காணப்பட்டுள்ளன.
அவை அனைத்தும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, தேசிய பரிவுமிக்க பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம், சமூக நலத் துறையின் உதவிகள் ஆகியவற்றை உட்படுத்திய தகவல்கள் என தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு தெரிவித்தது.
COVID-19 தொடர்பில் நீங்கள் பெறும் தகவல் உண்மையானதா, இல்லையா என்பதை Sebenarnya.My அகப்பக்கத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather