Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பண உதவி ரத்தாகும் என்ற தகவல் பொய்யானது!

Apr 20, 2020


 புதிய Cluster சம்பவம்! 

COVID-19 கோறனி நச்சில் தொற்றை கட்டுப்படுத்த, வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மலேசியர்கள் மீதான பரிசோதனைகள் நீடிக்கின்றன. 

இந்நிலையில், KLIA வழியாக புதிய Cluster சம்பவம் ஒன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் Datuk Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.

அதன் தொடர்பில் பேசிய அவர்: 

"Kluster berkenaan terdiri daripada 43 pelajar yang pulang dari Temboro, iaitu salah satu tempat yang diisytiharkan sebagai zon merah di daerah Magetan, Indonesia. Mereka kini sedang menjalani proses kuarantin iaitu 34 individu dikuarantin di Melaka manakala 9 lagi di Kuala Lumpur" என்றாரவர். 

இதுவரை, வெளிநாடுகளில் இருந்து திரும்பிய ஏறக்குறைய 15 ஆயிரத்திற்கும் அதிகமான மலேசியர்கள் நாடு முழுவதும் உள்ள 190 மையங்களில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

பொய்த் தகவல்!

வங்கிக் கணக்கு வைத்திருக்காத காரணத்தால் முதல் கட்ட தேசிய பரிவுமிக்க உதவி நிதியைக் கோர முடியாமல் போனவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

அவர்களுக்கான பண உதவி ரத்தாகி விடும் எனப் பகிரப்படும் தகவல் பொய்யானது.

உண்மையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு BSN வங்கிகளில், அந்த நிதி உதவியை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ள இவ்வாண்டு இறுதி வரை கால அவகாசம் இருப்பதாக வருவாய் வாரியம் தெளிவுப்படுத்தியது.

COVID-19 தொடர்பில் நீங்கள் பெறும் தகவல் உண்மையானதா இல்லையா என்பதை Sebenarnya.com அகப்பக்கத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ATM செயல்பாட்டு நேரம்!

நாட்டிலுள்ள அனைத்து ATM பண பட்டுவாடா இயந்திரங்களும், இனி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்.

இந்த MCO காலக்கட்டத்தில், பணம் எடுக்கச் செல்வதாகக் கூறி நிறையப் பேர் இரவில் வெளியில் நடமாடி வருவதை அடுத்து தற்காப்பு அமைச்சு அதனை அறிவித்தது.

90 நாட்கள் கால அவகாசம்!

MCO முடிந்தப் பிறகு, பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு தேசியப் பதிவுத் துறை JPN-னில் பதிய 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இக்காலக்கட்டத்தில், தாமதமான பதிவுகளுக்கு விதிக்கப்படும் அபராதங்களும் அகற்றப்படுவதாக தற்காப்பு அமைச்சு அறிவித்தது.

MCMC அனுமதி !

COVID-19 சம்பவங்கள் அறவே இல்லாத இடங்களில் மட்டும், இணையச் சேவையைப் பொறுத்துவது, பராமரிப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

அதற்கு தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் MCMC அனுமதி வழங்கியிருக்கிறது.

தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather