← Back to list
நிலைமை வழக்கத்திற்குத் திரும்பிவிட்டது என்றெண்ண வேண்டாம்!
Apr 19, 2020
Covid-19 னுக்கு எதிரான போராட்டம் நல்ல பலனைக் காட்டுகின்ற போதிலும், மெத்தனமாக இருந்து விட வேண்டும் என சுகாதார அமைச்சு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போனாலும், இந்த முயற்சியில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று எண்ணி விடாதீர்கள் என சுகாதாரத் துறை இயக்குனர் Datuk Dr Noor Hisham Abdullah வலியுறுத்தினார்.
எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் தொர்ந்து எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.
___________
இதனிடையே நாட்டில் நேற்று மட்டும் 54 புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து நாட்டில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஐய்யாயிரத்து முன்னூரைத் தாண்யுள்ளது.
நேற்று மட்டும் இரு புதிய மரண சம்பவங்களும் பதிவாகி, மொத்த மரண எண்ணிக்கை 88ஆக உயர்ந்துள்ளது.
________________
வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் மலேசியர்கள் அத்திட்டத்தை இப்போதைக்கு தொடர வேண்டாம்.
மூன்றாம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள இச்சமயத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு, வெளிநாட்டுக்குப் பயணிக்க முடியாமல் போகலாம் என தற்காப்பு அமைச்சர் Dato Sri Ismail Sabri Yaakob கூறினார்.
அரசாங்கம் அனுமதி கொடுத்தால் தான் அது நடக்கும் என தெரிவித்த அவர், முன்கூட்டியே திட்டமிட்டு பின்னர் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என அவர் மேலும் சொன்னார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather