← Back to list
குடும்ப வன்முறை குறித்து தகவல் கொடுங்கள்!
Apr 16, 2020
தங்களது அண்டை வீடுகளில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் ஏதும் இருந்தால், பொதுமக்கள் அது குறித்து உரிய தரப்பினரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள இக்காலக் கட்டத்தில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து தற்காப்பு அமைச்சு அவ்வாறு கேட்டுக் கொண்டது.
அதன் தொடர்பில் Talian Kasih வாயிலாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சுக்கு இதுவரை 135 அழைப்புகள் கிடைத்துள்ளதாகவும் அது கூறியது.
Covid-19 தொற்றில் இருந்து விடுபட்டு இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய சம்பவங்களைக் காட்டிலும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இன்று 119 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்; புதிதாக 110 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதனை அடுத்து இதுவரை பதிவு செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரு மரணம் பதிவாகி மொத்த மரணங்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.
மற்றொரு நிலவரத்தில், குறிப்பிட்ட வயதுடைய இரு தரப்பினர் Covid-19 எளிதாகத் தொற்றக்கூடிய ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
ஒரு தரப்பினர் 20தில் இருந்து 24 வயதுடையவர்கள்; மற்றொரு தரப்பினர் 56றில் இருந்து 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள துறைகளின் முதலாளிகள், வேலை செய்ய விரும்பும் தங்களது தொழிலாளர்கள் கட்டாய Covid-19 மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
SOCSOவின் கீழுள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட panel கிளினிக்குகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என அனைத்துலக வாணிக, தொழில்துறை அமைச்சு கூறியது.
இதனிடையே கட்டுமானத் துறையில் உள்ள முதலாளிகள் தத்தம் நிறுவனங்களில் 50 விழுக்காட்டு ஊழியர்கள் மட்டுமே பணி புரிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.
அதனைப் பின்பற்றாத நிறுவங்களுக்குக் கொடுக்கப்பட்ட அனுமதி மீட்டுக் கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கை என அது எச்சரித்தது.
ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான SPM தேர்வும் ஆறாம் படிவ மாணவர்களுக்கான STPM தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும், இவ்வாண்டு 2020/2021 ஆம் தவணைக்கான பொது பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்ப்பு வழக்கம் போல் தொடரப்படும்.
அவ்விரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றும் வாய்ப்பு கிடைக்கும் மாணவர்கள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத வாக்கில் பொதுப்பல்கலைக்கழகங்களில் நுழையக்கூடும் என உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்தது.
KL, Masjid Jamek LRT நிலையத்திற்கான நுழைவாயில்கள் இன்று தொடங்கி 28 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக Prasarana நிறுவனம் அறிவித்துள்ளது.
Masjid India பகுதியில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டிருப்பதை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அது விளக்கியது.
நோன்பு மாதத்தின் போது KLலில் ரமலான் சந்தைகள் தொடர்புடைய எந்த வணிகத்திற்கும் அனுமதி கிடையாது.
Drive-through மற்றும் முன்கூட்டியே தெரியப்படுத்தி எடுத்துக் கொள்ளுவது ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
தொகுப்பு : சுகந்தமலர் முனியாண்டி
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather