← Back to list
MTUC: தொழிலாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும்!
Apr 15, 2020
COVID-19 கோறனி நச்சில் தொற்றை கட்டுப்படுத்த, அரசாங்கம் அறிவித்துள்ள மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO-வை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் MTUC வரவேற்றுள்ளது.
இது காலத்துக்கேற்ற சரியான நடவடிக்கை என MTUC பொதுச் செயலாளர் ஜே. சோலமன் கூறியுள்ளார்.
பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்நடவடிக்கை அவசியமான ஒன்று என்றும் அவர் சொன்னார்.
இவ்வேளையில், நாடு எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் தான் முதலாளிமார்கள், அரசாங்கத்தின் ஆலோசனைகளை பின்பற்றி, பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஜே. சோலமன் வலியுறுத்தினார்.
“நமது பிரதமர் கூறிய ஆலோசனைப்படி, ‘new norms’ (புதிய வழமை)-களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் முதலாளிகள் தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களது உரிமைகளை மதிக்க வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.
இந்த MCO நீடிக்கும் இக்காலக்கட்டத்தில் மட்டும் அல்லாமல் இது முடிந்த பிறகும், பிரதமர் அறிவித்த இப்புதிய வாழ்க்கை முறை மாற்றங்களை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நடப்பு சூழ்நிலைக்கான காரணங்கள் கூறி, தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வது, சம்பளத்தை குறைப்பது, கட்டாய விடுப்பு எடுக்க வைப்பது போன்ற நடவடிக்கைகளை முதலாளிமார்கள் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அதே சமயம், MCO காலக்கட்டத்தில் தங்களது தொழிலாளர்கள் நலனைக் காக்க தவறும் ஒரு சில பொறுப்பற்ற முதலாளிமார்களை கையாள, MTUC அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை பற்றியும் அவர் தெரிவித்தார்.
“அரசாங்கமும், தொழிலாளர்களின் நலன் கருதி, MTUC-யின் கோரிக்கைப்படி, Emergency Employment Regulations (EER)-ரை கட்டாயம் அமுல்படுத்த வேண்டும். இந்த Emergency Employment Regulations மட்டும் தான் பொறுப்பற்ற முதலாளிமார்களிடம் இருந்து தொழிலாளார்களை காப்பற்ற முடியும்” என்றாரவர்.
தொழிலாளர்களுக்கான குறுகிய கால அல்லது அவசரக் கால வழிகாட்டிகள் எனும் இந்த EER-ரின் வாயிலாக முதலாளிமார்கள் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்குவதை தடை செய்ய முடியும் என்றாரவர்.
இவ்வேளையில், தங்களுக்கு பாதிப்பு இருப்பதாக உணரும் தொழிலாளர்கள் MTUC-யை தொடர்புக் கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
An article by: Sauriyammal Rayappan
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather