← Back to list
தொழில் நடத்துநர்கள் இன்று தொடங்கி விண்ணப்பிக்கலாம்!
Apr 13, 2020
மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO-வின் கீழ், குறிப்பிட்ட சில தொழில் மற்றும் சேவைத் துறைகள் மீண்டும் இயங்க அரசாங்கம் வாய்ப்பளித்திருக்கின்றது.
இந்நிலையில் அறிவிக்கப்பட்டு விட்டது என்பதற்காக, சம்பந்தப்பட்ட தொழில் துறையினர் தங்களது வியாபாரத்தை வழக்கம் போல் தொடங்கலாம் என்று அர்த்தமில்லை.
அதற்கு அவர்கள் முதலில் அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சிடம் இருந்து அனுமதி பெற்றாக வேண்டும் என, தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob கூறியுள்ளார்.
உதாரணத்திற்கு, முடித்திருத்தும் சேவையை வழங்குபவர்கள், அனுமதி கிடைத்தால் மட்டுமே சிகையலங்கார கடைகளை திறக்க முடியும் என்றாரவர்.
அதிலும், COVID-19 பரவல் அதிகமிருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் கடைகளை திறக்க முடியாது என்றும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
அனுமதிக்கப்பட்ட தொழில்துறையினர் பின்பற்ற வேண்டிய தர செயல்பாட்டு நடைமுறை SOP விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
தொழில் நடத்துநர்கள் இன்று காலை 9 மணி தொடங்கி, www.miti.gov.my என்ற இணைய அகப்பக்கம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம்.
முடித் திருத்தும் சேவை, சுயசேவை அல்லாத சலவைக் கடைகள், பதிவுச் செய்யப்பட்ட பாரம்பரிய மருத்துவச் சேவை, மூக்குக் கண்ணாடிக் கடைகள், மின்சார – மின்னியல் சாதனங்கள் விற்பனைக் கடைகள், வன் பொருள் கடைகள் உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்ட தொழில் மற்றும் சேவைத் துறைகளாகும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather