Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

235 புதிய சம்பவங்கள்!

Mar 26, 2020


இன்று பிற்பகல் 12 மணி வரை நாட்டில் 235 புதிய Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான சம்பவங்களைப்  பதிவு செய்த நாள் இன்று என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சம்பவங்களையும் சேர்த்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை ஈராயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 215 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

45 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்; அதில் 32 பேருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

புதிதாக நான்கு மரணங்கள் பதிவாகி மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

Covid-19 நிதித் திட்டம் வாயிலாக இதுவரை 84 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளது.

அத்தொகை அவ்வப்போது உதவி தேவைப்படும் தரப்பினருக்கு விநியோகிக்கப்படும் என தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வேளையில், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களின் இரு மாத சம்பளத்தை Covid-19 நிதித் திட்டத்திற்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அரசாங்கம் புதிய விதிமுறைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கவிருக்கிறது.

புதிய தர செயல்பாட்டு நடைமுறை SOP விரைவில் தாக்கல் செய்யப்படும் என தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைப் பின்பற்றாதவர்களுக்கு இனியும் அறிவுரை வழங்கப்படாது.

சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகக் கைது செய்யப்படலாம் என  அரச மலேசிய காவல் துறை எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றுவதை உறுதிச் செய்யும் பொறுப்பு PDRMமுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அது மிகப் பெரிய சவாலாக இருப்பதாக தேசிய காவல் படைத் துணைத் தலைவர் தெரிவித்தார்.

அத்தியாவப் பொருட்களை வாங்குவதற்கான தர செயல்பாட்டு நடைமுறை SOPயை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுவதை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.

அவ்வாறு தாங்கள் எதனையும் வெளியிடவில்லை என அது தெளிவுபடுத்தியது.

பொருட்கள் வாங்க காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 3 வரை மட்டுமே வெளியேற முடியும்; 40 நிமிடங்களுக்கு மேற்போகக்கூடாது என்றும் அந்த SOPயில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Covid-19 குறித்த உண்மையானத் தகவல்களை Sebenarnya.my என்ற இணைய அகப்பக்கத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather