← Back to list
EPF: மாதம் 500 ரிங்கிட் பணம் மீட்கலாம்!
Mar 24, 2020
Covid-19 பரவலை அடுத்து, வாழ்வாதாரச் சுமைகளைக் குறைக்க, ஊழியர் சேமநிதி வாரிய சந்தாத்தாரர்கள், இரண்டாவது கணக்கில் இருந்து மாதா மாதம் 500 ரிங்கிட்டை எடுக்கலாம்.
சந்தாத்தாரர்கள் அடுத்து வரும் 12 மாதங்களுக்கு அவ்வாறு பணத்தை எடுக்கலாம்.
55 வயதுக்குட்பட்ட சந்தாத்தாரர்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
இதற்கான பதிவு ஏப்ரல் ஒன்றாம் தேதி இணையத்தில் தொடங்கும்.
இது மிகவும் விரைவான மற்றும் துல்லிதமான முறை என்பதால், சந்தாத்தாரர்கள் EPF முகப்புகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பொதுவாக, மின்னஞ்சல், தபால் ஆகிய முறைகளின் கீழ் அதிக நாள் எடுக்கும் நிலையில், இணையம் வாயிலான பதிவுகள் மூன்றே நாட்களில் நிறைவடையும்.
i-Lestari திட்டத்தின் கீழ் இந்த சலுகை வழங்கப்படுவகிறது.
மே ஒன்றாம் தேதி தொடங்கி சந்தாத்தாரர்களின் வங்கிக் கணக்கில் பணம் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin
இந்த சலுகை வழி, நாட்டில் உள்ள ஏறக்குறைய 12 மில்லியன் சந்தாத்தாரகள் பயனடைவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin நேற்று இதனை அறிவித்தார்.
இவ்வேளையில், EPF பணத்தை எடுக்க உதவுவதாக கூறி வரும் எந்த இணைய இணைப்புகளையும் (LINK) நம்பி ஏமாற வேண்டாம் என சந்தாதாரர்கள் நினைவுறுத்தப்படுகின்றனர்.
எதுவாக இருந்தாலும் EPF சேவையை மட்டும் நாடுகள்; மறந்தும் கூட மூன்றாம் தரப்பை நாட வேண்டாம்!
மேல் விவரங்களை EPF விரைவில் அறிவிக்கும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather