Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19: பயணத் தடை இல்லை!

Mar 18, 2020


Coronavirus பரவலை கையாள, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணை நள்ளிரவு தொடங்கி அமுலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இப்போதைக்கு பொது மக்கள் மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்கலாம்; அதன் தொடர்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக மீட்டுக் கொள்ளப்படுவதாக தேசிய காவல் படைத் தலைவர்  Tan Sri Abdul Hamid Bador கூறியிருகின்றார்.

மாநிலம் விட்டு மாநிலம் செல்வோர், முதலில் அருகிலுள்ள காவல் நிலையங்களில் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேற்றிரவு பெரும்பாலான காவல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அனுமதிப் பாரங்களை பெறுவதற்காக, இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான மக்கள் காவல் நிலைய வாசல்களில் வரிசைக் கட்டி நின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவத் தொடங்கின.

இதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த, பயணப் பாரங்களை நிரப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், பொது மக்கள் மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க தடையில்லை என்றும் IGP நேற்று பின்னிரவு அறிவித்தார்.

இருந்த போதிலும், Corona கிருமித் தொற்றுப் பரவலை கையாள, அவசியம் இல்லாத பயணங்களை தவிர்குமாறும் IGP ஆலோசனை கூறினார்.

அவ்விவகாரம் குறித்து முக்கிய அதிகாரிகளுடனான இன்றைய சந்திப்புக்கு பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு நிலவரத்தில், நாட்டில் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மட்டுமே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; 

மாறாக, அது ஊரடங்குச் சட்டம் அல்ல என்பதை பொது மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என IGP கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே, தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கி, பதற்றமடைய வேண்டாம் என்றும் Tan Sri Abdul Hamid பொது மக்களை அறிவுறுத்தினார்.

இவ்வேளையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கச் செல்வோருக்கு எந்த தடையும் இல்லை.

ஆனால், அவ்வாறு செல்பவர்கள் பிள்ளைகள் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தையே உடன் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவுறுத்தியிருக்கின்றது.

பொது இடங்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்றுக்கூடுதல்கள் நடைபெறாமல் இருப்பதும் உறுதிச் செய்யப்படும் என அம்மன்றம் தெரிவித்தது.

மற்றொரு நிலவரத்தில், சபா மாநிலத்தவர் அல்லாதவர்கள் அம்மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் மாநில அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றப் பின்னரே சபாவுக்குள் நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather