← Back to list
Covid-19: மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகின்றது!
Mar 17, 2020
மலேசியாவில் Covid-19 பரவலை கையாள, மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
நாளை (18 மார்ச் 2020) தொடங்கி அடுத்த 14 நாட்களுக்கு ( 31 மார்ச் 2020) வரை அந்த உத்தரவு அமுலில் இருக்கும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin நேற்றிரவு அறிவித்தார்.
அந்த கட்டுப்பாட்டின் கீழ்:
- நாடு முழுவதும், மதம், விளையாட்டு, சமூகம் மற்றும் கலச்சாரம் சார்ந்த நடவடிக்கைகளில் பொது நடமாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
- அனைத்து வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் வியாபாரத் தளங்களும் மூடப்படும்; எனினும், பேரங்காடிகள், மளிகைக் கடைகள், அங்காடிக் கடைகள் என அன்றாட தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும்.
- இக்காலக்கட்டத்தில் மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது; மலேசியாவுக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும்.
- வெளிநாட்டில் இருந்து மலேசியாவுக்கு திரும்புவோர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
- அனைத்து பொது மற்றும் தனியார் பள்ளிகள், பாலர் பள்ளிகள், மழலையர் பள்ளிகள், பொது - தனியார் உயர்க்கல்விக் கழகங்கள், மற்றும் திறன் பயிற்சிக் கழகங்கள் மூடப்படும்.
- அடிப்படை சேவைகளான நீர், மின்சாரம், எரிசக்தி, தொலைத்தொடர்பு, தபால், போக்குவரத்து, எண்ணெய், எரிவாயு, எரிபொருள், ஒளிபரப்பு துறை, வங்கிகள், மருந்தகங்கள், தீயணைப்பு, சிறைச்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு, துப்புரவு மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, இதர அனைத்து அரசு மற்றும் தனியார் வளாகங்களும் மூடப்படும்.
இவ்வேளையில், அரசாங்கத்தின் இத்தீவிர நடவடிக்கை பொது மக்களின் வாழ்க்கையில் சிரமத்தை ஏற்படுத்துகின்றது என்றாலும், Covid-19 கொள்ளை நோயை கட்டுப்படுத்த இக்கட்டுப்பாடு அவசியமாவதாக Tan Sri Muhyiddin தெரிவித்தார்.
உணவு உள்ளிட்ட இதர அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக உறுதியளித்த பிரதமர், இக்கட்டுப்பாடு குறித்து பொது மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பிரதமர் 4 கூடுதல் நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளார்.
அவற்றில் ஒன்று தான் தொழிலாளர்களுக்கான நிதி உதவி; சம்பளம் இல்லாத விடுப்பு எடுக்கக் கட்டாயப்படுத்தப்படும் தரப்பினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என Muhyiddin கூறினார்.
அது தவிர, 200 ரிங்கிட் வாழ்க்கைச் செலவின உதவித் தொகை வழங்கும் நடவடிக்கை விரைவுப்படுத்தப்படுவதோடு, கூடுதல் 100 ரிங்கிட் நிதி வரும் மே மாதம் வழங்கப்படும்.
அனைத்து வர்த்தக துறைகள் மற்றும் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தில், அடுத்து வரும் 6 மாதங்களுக்கு 2 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்றும் Muhyiddin அறிவித்தார்.
நேற்று மட்டும் நாட்டில் 125 உறுதிப்படுத்தப்பட்ட Covid-19 சம்பவங்கள் பதிவாகின; இதையடுத்து மொத்த எண்ணிக்கை 553ஆக அதிகரித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather