← Back to list
நாட்டில் Covid-19 கட்டுப்பாட்டில் உள்ளது!
Mar 12, 2020
நாட்டில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அக்கிருமித் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்படக்கூடிய அளவிலேயே உள்ளது.
சுகாதாரத்துறையின் புதிய அமைச்சர் Datuk Seri Dr Adham Baba அவ்வாறு கூறியிருக்கிறார்.
நாட்டில் Covid-19 நிலவரம் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், அண்மையில் KL, Seri Petalingங்கில் உள்ள பள்ளிவாசலில் சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டவர்கள், மருத்துவ பரிசோதனை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
Covid-19 பீடித்திருந்த புருணையைச் சேர்ந்த ஒருவர் அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததே அதற்குக் காரணம் என அமைச்சர் கூறினார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் கிருமி ஒழிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இவ்வேளையில், நாட்டில் Covid-19 தொடர்பில் முதலாவது sporadic சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sporadic சம்பவம் என்றால் Covid-19னால் பாதிக்கப்பட்டவர் அக்கிருமித் தொற்று பரவியுள்ள நாடுகளுக்குச் செல்லாதவர்.
அக்கிருமி தொற்று பீடித்துள்ளவர்களுடனும் தொடர்பில் இல்லாதவர் என அர்த்தமாகும்.
அதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக NST தகவல் கூறுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather