← Back to list
Covid-19 ஒரு கொள்ளை நோய்!
Mar 12, 2020
Covid-19 கிருமிப் பரவலை, உலக சுகாதார நிறுவனம் WHO கொள்ளை நோயாக வகைப்படுத்தியிருக்கின்றது.
உலகெங்கும் ஒரே நேரத்தில் பல நாடுகளுக்கு பரவும் நோய், கொள்ளை நோயாக வகைப்படுத்தப்படும்.
அவ்வகையில், சீனாவுக்கு வெளியே Covid-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களில் 13 மடங்கு அதிகரித்திருப்பதாக WHO கூறியது.
அக்கிருமி தொற்று பரவல், 114 நாடுகளுக்கு பரவியிருக்கின்றது.
உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 18 ஆயிரம் சம்பவங்கள் பதிவாகியுள்ளன; நான்காயிரத்திற்கும் அதிகமானோர் அக்கிருமித் தொற்றுக்கு பலியாகியிருக்கின்றனர்.
நாட்டில் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 20 Covid-19 சம்பவங்களை அடுத்து, மொத்த எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை, 26 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியிருக்கின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather