← Back to list
Perikatan Nasional - அனைத்து மலேசியர்களுக்குமானது!
Mar 11, 2020
தொடர்பு, பல்லூடக அமைச்சர் Datuk Saifuddin Abdullah
Perikatan Nasional அரசாங்கம் அனைத்து மலேசியர்களுக்குமானது என தொடர்பு, பல்லூடக அமைச்சர் Datuk Saifuddin Abdullah தெரிவித்திருக்கின்றார்.
31 அமைச்சர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்கள் என்றாலும், Perikatan Nasional பிற இனத்தவர்களின் நலனையும் கவனத்தில் கொள்ளும் என்றாரவர்.
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin-னின் அமைச்சரவையில் பிற இனத்தவரின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாகப் பேசப்படுவதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கூறினார்.
புதிய அமைச்சரவையில் முழு அமைச்சர்களாக இந்தியர் ஒருவரும் சீனர் ஒருவரும் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நேற்று பதவி உறுதிமொழி எடுத்த கையோடு பணியைத் தொடக்கியவர்களில் ஒருவராக நிதியமைச்சர் Datuk Seri Tengku Zafrul Tengku Abdul Aziz திகழ்கிறார்.
நிதி அமைச்சர் Datuk Seri Tengku Zafrul Tengku Abdul Aziz
தமக்கு மிகப் பெரிய சவால் காத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் தலையீடுகள் இல்லாமல் தமது கடமைகளை ஆற்றப் போவதாகக் கூறினார்.
நேற்று சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்ற Datuk Seri Dr Adham Baba-வும் தமது பணியை உடனடியாகத் தொடக்கினார்.
சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Adham Baba
Covid-19 கிருமித் தொற்றுப் பரவலை அடுத்து, கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறினார்.
ஆகக் கடைசியாக நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 12 Covid-19 கிருமித் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
இதுவரை பதிவான சம்பவங்கள் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather