← Back to list
தேசிய சட்டத் துறை தலைவர் Tan Sri Idrus Harun !
Mar 07, 2020
Tan Sri Idrus Harun
தேசிய சட்டத் துறையின் புதிய தலைவராக Tan Sri Idrus Harun நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதியான Tan Sri Idrus அடுத்து வரும் ஈராண்டுகளுக்கு அப்பொறுப்பை ஏற்பார்.
அவரது நியமனத்திற்கு மாமன்னர் ஒப்புதல் அளித்திருப்பதை பிரதமர் துறை அலுவலகம் அறிக்கை வழி உறுதிப்படுத்தியிருக்கின்றது.
இதனிடையே, இதற்கு முன் அப்பொறுப்பை வகித்த Tan Sri Tommy Thomas-சின் சேவைக்கு பிரதமர் துறை அலுவலகம் நன்றி தெரிவித்துக் கொண்டது.
Tan Sri Tommy Thomas
Tan Sri Tommy, கடந்த மாதம் 28ஆம் தேதி தேசிய சட்டத் துறை தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.
65 வயதாகும் Tan Sri Idrus, தேர்தல் ஆணையத் தலைவர் Datuk Azhar Harun-னின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், Tan Sri Idrus-சின் நியமனத்தை மலேசிய வழக்கறிஞர் மன்றம் வரவேற்றிருக்கின்றது.
தேசிய சட்டத் துறை மற்றும் நீதித் துறையில் Tan Sri Idrus-சுக்கு உள்ள பரந்த அனுபவம், அவர் தமது பணிகளை ஆக்ககரமாக மேற்கொள்ள நிச்சயம் துணைப் புரியும் என அம்மன்றம் நம்பிக்கை தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather