← Back to list
2019 SPM: தமிழ் மொழி - இலக்கியம் சிறந்த தேர்ச்சி!
Mar 06, 2020
நாடு முழுவதும் SPM தேர்வில் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களில் இந்திய மாணவர்கள் இம்முறை சிறந்த தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
அவ்வகையில், சிலாங்கூரில் 2018 ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு SPM தமிழ்மொழிப் பாடத்திற்கான தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
தமிழ்மொழிப் பாடத்தில் ஈராயிரத்து 900 மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இலக்கியப் பாடத்தில் A மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 45 பேர் ஆகும்.
நெகிரி செம்பிலானில் கடந்தாண்டு SPM தமிழ்மொழிப் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக மாநில தமிழ்மொழிப் பாட உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டில் 94.8 விழுக்காட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், கடந்தாண்டு அவ்விழுக்காடு 97.8ஆகப் பதிவாகியிருப்பதாக சத்தியநாராயணன் கிரிஷ்ண ஐயர் கூறினார்.
தமிழ் இலக்கியத்திலும் கடந்த 2018ஆம் ஆண்டு 94.1 விழுக்காடாக இருந்த தேர்ச்சி விகிதம், கடந்தாண்டு 95.6ஆக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.
ஒட்டு மொத்தத்தில் இந்திய மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக சத்தியநாராணயனன் கூறினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather