← Back to list
நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டார் Zahid!
Mar 03, 2020
முன்னாள் துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi, KL உயர்நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதையடுத்து நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வருமாறு அரசு தரப்பு வழக்குரைஞர் செய்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்திருக்கின்றது.
நேற்று புதியப் பிரதமருடன் சந்திப்பு இருப்பதாக கூறி, KL உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய தம்மீதான வழக்கு விசாரணையை Zahid ஒத்தி வைத்தார்.
ஆனால், பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, நேற்று எந்தவோர் அரசியல் தலைவரையும் சந்திப்பதாக திட்டமில்லை என பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து, நீதிமன்றத்திடம் Zahid கூறிய காரணம் சர்ச்சையானது.
இதையடுத்து, Zahid, பொய் கூறி, நீதிமன்ற வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து, விடுப்பு எடுத்துக் கொண்டார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather