← Back to list
புதிய Covid-19 சம்பவம் ஏதுமில்லை!
Mar 02, 2020
நாட்டில் உறுதிச் செய்யப்பட்ட Covid-19 கிருமித் தொற்று தொடர்பில் புதிய சம்பவம் ஏதும் பதிவாகவில்லை.
இதுவரை பதிவு செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 29 ஆகவே இருக்கின்றது; 22 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதனிடையே Covid-19 பீடித்திருந்த இருவருடன் தொடர்பில் இருந்த ஐவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு அத்தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இவ்வேளையில், இரு பிரமுகர்களுக்கு Covid-19 பீடித்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மற்றொரு நிலவரத்தில், இந்தோனேசியாவில் முதல் முறையாக உறுதிப்படுத்தப்பட்ட இரு Covid-19 கிருமித் தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொற்று பீடித்த இரு நபர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்.
--------
புதிய பிரதமர் Tan Sri Muhyiddin Yassin இன்று எந்த அரசியல் தலைவர்களுடனும் சந்திப்பு நடத்த அட்டவணையிடப்படவில்லை.
Muhyiddin, அரசாங்கத் தலைமைச் செயலாளரையும் துணைத் தலைவர்களையும் மட்டுமே சந்திப்பதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பிரதமருடன் கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதால், Datuk Seri Dr Ahmad Zahid Hamidiட்டுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து அது அவ்வறிக்கையை வெளியிட்டது.
--------
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather