Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Muhyiddin அடுத்த பிரதமரா ?!

Feb 28, 2020


எட்டாவது பிரதமர் யார் என்ற கேள்விக்கு மலேசியர்கள் விடைத் தேடி வரும் நிலையில், Tan Sri Muhyiddin Yassin-னின் பெயர் திடீரென முக்கியத்துவம் பெற்றிருக்கிறது!

BERSATU கட்சியை Pakatan Harapan-னில் இருந்து வெளியேறச் செய்து, Pakatan Harapan அரசாங்கம் கவிழக் காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், Tun Dr Mahathir Mohamad-டின் நேற்றைய அறிவிப்பு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

BERSATU, Tan Sri Muhyiddin Yassin-னை பிரதமர் வேட்பாளராக முன்மொழியும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என Tun M கூறியிருக்கின்றார்.

PH ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த Muhyiddin, எட்டாவது பிரதமராக முன்மொழியப்பட்டு, அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் தமக்கு பிரச்னை ஏதும் இல்லை என்றும், இடைக்காலமாக பிரதமர் பதவியில் இருக்கும் Tun M சொன்னார்.

இது குறித்து பேசிய அரசியவ் ஆய்வாளர் Dr Oh Ei Sun, Tun Mமின் பேச்சு Datuk Seri Anwar Ibrahim-மைக் காட்டிலும், Muhyiddin-னை தமது மிகப் பெரிய அரசியல் வைரியாக தாம் பார்க்கவில்லை என்பதையே புலப்படுத்துவதாக  கூறினார்.

முந்தைய UMNO அரசாங்கத்தின் கீழ் கல்வி அமைச்சராக இருந்த போது, Tun M-மின் சிந்தனையில் உதித்தத் திட்டமான கணிதம் - அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் முறையை ரத்துச் செய்து மகாதீரின் கோபத்திற்கு ஆளான போதும், முன்னாள் பிரதமர் Datuk Sri Najib Razak-கிற்கு எதிராக குரல் எழுப்பிய போது, Muhyiddin, Tun M-முடன் இணைந்து BERSATU கட்சியை தொடங்கிய சூழ்நிலையை அவர் சுட்டிக் காட்டினார்.

இதற்கிடையில் Muhyiddinனின் அரசியல் அனுபவங்களை நாம் மறந்துவிடக் கூடாது என மற்றோர் அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் Dr Sivamurugan Pandian சொன்னார்.

தேசிய அரசியல் நீரோட்டத்தில் Muhyiddin-னுக்கு இருக்கும் அனுபவம், அவருக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக Pandian கூறினார்.

துணைப் பிரதமராகவும், உள்துறை, கல்வி என முக்கிய அமைச்சுகளில் அமைச்சராகவும் Muhyiddin பொறுபேற்றுள்ள அனுபவங்களை அவர் சுட்டிக் காட்டினார். 

என்றாலும் மாமன்னர் யாரை ஆட்சியமைக்க அழைக்கப் போகிறார் என்ற விஷயம் தெரியும் வரை எதையும் அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை என்றார் அவர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather