Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மகாதீருக்கு ஏன் இந்த அவசரம்?

Feb 28, 2020


நாட்டின் புதிய பிரதமர் யார் என்பதை வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என Tun Dr Mahathir Mohamad வெளியிட்ட அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இடைக்கால பிரதமராக உள்ள Tun M, ஏன் மாமன்னரை முந்திக் கொண்டு அது போன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறார் என அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளன.

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் மாமன்னருக்கு மட்டுமே உண்டு என கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக சொல்கிறது.

அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் மாமன்னர் தீவிரமாக இறங்கி, இன்று மலாய் ஆட்சியாளர்களும் அது குறித்து கூட்டம் நடத்தவிருக்கின்றனர்.

அப்படி இருக்க, மகாதீர், எதற்காக அவ்வறிப்பை வெளியிட வேண்டும் என Pakatan Harapan-னும், அரசியல் ஆய்வாளர்களும் கேட்கின்றனர்.

இதன் தொடர்பில் பேசிய அரசியல் ஆய்வாளர் டத்தோ அன்புமணி பாலன்....

"அவரைப் (மகாதீர்) பொறுத்த வரை அவர் ஒரு தற்காலிக பிரதமர் தான். ஏன் அவர் மிக அவசரமாக சில அறிவிப்புகளை செய்கிறார் என்பது மக்களுக்கு ஒரு புரியாத புதிராக இருந்து வருவதாக" குறிப்பிட்டார்.

இவ்வேளையில், அடுத்தடுத்து அரங்கேறி வரும் அரசியல் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் எத்தகையைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என வினவப்பட்டதற்கு, அன்புமணி பாலன் கூறியதாவது: 

"அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழ்நிலை நிலவி வரும் இந்த நேரத்தில், அரசியல் தலைவர்கள்  மக்களைப் பற்றி சிந்திக்கின்றார்களா? கடந்த சில தினங்களாகவே ஆட்சியை கைப்பற்றுவதிலும், அதிகாரத்தை கைப்பற்றுவதிலும் தான் அவர்களது கவனம் இருந்து வருகின்றது; ஆனால் மக்களுடைய எண்ணங்கள் பற்றி அரசியல் தலைவர்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை. அப்படி கவலைப்பட்டிருந்தால், நிச்சயம்  இந்த நிலை வந்திருக்காது" எனக் கூறினார்.

புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை.

மாமன்னர் புதிய பிரதமரை நியமித்தப் பிறகு வேண்டுமானால், அவர் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரலம்; 

அல்லது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை யாராவது கொண்டு வரலாம். 

அதன் போது மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கலாமே ஒழிய, அவர்கள் வாக்களித்து பிரதமரை தேர்ந்தெடுக்க முடியாது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டினர். 

இவ்வேளையில், மகாதீரின் அந்த அறிவிப்பை தாங்கள் ஒரு பொருட்டாக கருதப்போவதில்லை என UMNO-வும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றது.

அரண்மையில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கப் போவதாகவும் UMNO தீர்க்கமாக கூறி விட்டது.
 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather