Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பறக்கும் பாவையைப் பிடிக்க ஆளில்லை !

Aug 30, 2019


ஜி. சாந்தி!  

நம்மில் பலர் இந்த பெயரை கண்டிப்பா மறந்திருக்க வாய்ப்பே இல்ல! அதுவும் 90's kids-சுக்கு சொல்லவே தேவையில்ல...

90-ஆம் ஆண்டுகளில் தென் கிழக்காசியாவின் பறக்கும் பாவையாக ஜொலித்தவர் தான் ஜி.சாந்தி.

அந்த கால நாளிதழ்கள் கூட அவங்க அடிக்கடி முதல் பக்கத்துல தான் "பறந்தாங்க"...இன்றளவும் நாட்டில் அவங்களுக்கு ஈடான ஓர் ஓட்டக்காரர் இல்லை என்ற நிலையில், தேசிய தினத்தை ஒட்டி ராகா செய்திப் பிரிவு அவங்ககிட்ட நடத்திய சிறப்பு நேர்காணல் இதோ உங்களுக்காக.....

1967-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி பிறந்த சாந்திக்கு,  பேரா குவாலா கங்சார் தான் சொந்த ஊர்.

1991 மணிலா சீ போட்டியில்  அப்போதைய ஆசியாவின் அதிவேக வீராங்கனையான பிலிப்பின்ஸ்சைச்  சேர்ந்த Lydia de Vega-விடம் 100 மீட்டரில் தோற்ற சாந்தி, 200 மீட்டர் ஓட்டத்தில் மலேசியாவுக்கு தங்கம் வென்றுக் கொடுத்த அன்றைய நாளை இன்றளவும் மறக்க முடியவில்லை என சொன்னாங்க.

Lydia de Vega,Philippines

"100 மீட்டர் ஓட்டத்தில் லிடியாவிடம் தோற்றப் பிறகு, என்னோட பயிற்றுநர்கள் தான் 200 மீட்டர் ஓட்டத்துக்கு எனக்கு ஊக்குவிப்பு கொடுத்தாங்க, பயப்படமா ஓடு அப்படின்னு எனக்கு உற்சாகம் கொடுத்தாங்க. நீ underdog-தான், so, நீ லிடியாவோட டைம்மே அடிக்கலாம் அப்படின்னு சொன்னாங்க, எனக்கு ஏழாவது லேன் கிடைச்சுது; கடைசி 5 மீட்டர் இருக்கும் போது லிடியா கிட்ட வந்துட்டோன்னு நான் கொஞ்சம் பதற்றமடைஞ்சுட்டேன், இருந்தாலும் அந்த ஓட்டத்த ஓடி முடிச்சு தங்கப் பதக்கம் வென்றேன்"

என்று தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட அந்த தங்கத் தாரகை, 200 மீட்டர் ஓட்டத்தின் கடைசி கோட்டை நெருங்கும் போது தடுமாறி கீழே விழுந்த சம்பவத்தையும் நினைவுக் கூர்ந்தார்.

"200 மீட்டர் ஓட்டத்தில் இன்னும் ஒரு மீட்டர் தூரம் இருந்த போது நான் கீழே விழுந்துட்டேன், அப்படியும் நான் ஜெயிச்சுட்டேன், எனக்கு அந்த சமயத்துல கையில அடிப்பட்டிருந்துச்சு, ஆனா எனக்கு வலி எல்லாம் ஒன்னும் தெரியல, சந்தோஷம் மட்டும் தான் இருந்துச்சு; மலேசியாவுக்கு தங்கப் பதக்கம் எடுத்துக் கொடுத்த சந்தோஷத்துல எனக்கு எதுவுமே தெரியல, இது தான் 100 மீட்டர் ஓட்டத்தில நான் கோல்ட் மெடல் எடுத்தது, அந்த  proud moment-டே என்னால இன்னும் மறக்க முடியல"

அதன் பிறகு ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வுப் பெற்று,  1995-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட சாந்தி, ஒரு குழந்தைக்கு தாயாகி பிறகு 1996-ஆம் ஆண்டு தனது கணவர் கொடுத்த உற்சாகத்தை அடுத்து ஜூல மாதம் அதிரடியாக களத்திற்கு திரும்பினார்.

பழைய வேகம் அவரிடம் இருக்குமா என கேள்வி கேட்டவர்களை,  Jakarta-வில் 100 - 200 மீட்டர் என இரு ஓட்டங்களிலும் தங்கப் பதக்கம் வென்று தனது திறமையை நிரூபித்து அவர்களின் வாயை அடைத்தார் சாந்தி.

இதன் வழி சீ போட்டியில் 14 ஆண்டுகள் வறட்சிக்குப் பின் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் மலேசியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது.

"அந்த சமயத்துல நான் 200 மீட்டர் ஓட்டத்துல தேசிய சாதனைக் கூட செய்திருந்தேன்; So, ஒரு குழந்தைக்கு தாயானப் பிறகும் இப்படி ஓட கடுமையான உழைப்பு தான் காரணம் அப்படின்னு நான் உணர்ந்தேன். ஜகார்த்தாவில் podium ஏறி நிற்கும் போது, ஜாலோர் கெமிலாங் பிடிச்சுகிட்டு, நெகாராக்கு பாடல் கேட்கும் போது என ரொம்பரொம்ப பெருமையா இருந்துச்சு, ஒரு மலேசியராக"

அப்படி என்று சாந்தி சொல்லி முடிக்கும் போது, அவர் அனுபவித்த அந்த இனிமையான தருணங்களை நன்றாகவே உணர முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த இனிய தருணங்களை தம்மால் நிச்சயம் மறக்கவே முடியாது என்றும் சாந்தி தெரிவித்தார்.

100 மீட்டர் ஓட்டத்தில் ஜி. சாந்தியின் 11.51 வினாடிகள் தேசிய சாதனை நேரத்தை இன்னும் யாரும் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் "ஹெப்பி மெர்டேக்கா"....

ஜி. சாந்தியின் சாதனைகள்....

1991 மணிலா சீ போட்டி - 200 மீட்டர் தங்கம்
1991 மணிலா சீ போட்டி - 100 மீட்டர் வெள்ளி

1993 சிங்கப்பூர் சீ போட்டி - 100 மீட்டர் வெள்ளி
1993 சிங்கப்பூர் சீ போட்டி - 200 மீட்டர் வெள்ளி 
1993 சிங்கப்பூர் சீ போட்டி - 4 x 400 மீட்டர் தங்கம்

1997 ஜகார்த்தா சீ போட்டி - 100 மீட்டர் தங்கம்
1997 ஜகார்த்தா சீ போட்டி - 200 மீட்டர் தங்கம்
1997 ஜகார்த்தா சீ போட்டி - 4x400 மீட்டர் வெள்ளி 

1998 Fukuoka ஆசிய திடல் தடப் போட்டி - 100 மீட்டர் வெண்கலம்

1998 பேங்கோக் ஆசியப் போட்டி - 100 மீட்டர் 4ஆம் இடம் ( Photo Finish -சில் நூழிலையில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார் )
1998 பேங்கோக் ஆசியப் போட்டி - 200 மீட்டர் 4ஆம் இடம் 
 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather