← Back to list
ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் சோகம்!
Apr 22, 2019
இலங்கையில் நேற்று ஒரே நாளில் நிகழ்ந்த 8 தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பில், இதுவரை 13 பேர் கைதாகியிருக்கின்றனர்!
ஈஸ்டர் திருப்பலி கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள் மற்றும் தங்கும் விடுதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட அம்மோசமான தாக்குதல்களை அடுத்து, இலங்கை முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தாக்குதல்களில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள வேளை, 450 பேர் காயமடைந்துள்ளனர்.
பலியானவர்களில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, துருக்கி, நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகலைச் சேர்ந்த நாட்டினரும் அடங்குவர்.
எனினும், அத்தாக்குதல்களில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய Wisma Putra, இலங்கையில் உள்ள மலேசியர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அத்தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ள மலேசியா, இலங்கைக்கு உதவிகள் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நேற்றைய சோகம் இன்னும் தீராத நிலையில், இலங்கையில் 9ஆவது வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
Colomboவிலுள்ள Bandaranaike அனைத்துலக விமான நிலையம் நோக்கிச் செல்லும் சாலையில் 2 மீட்டர் நீளத்திலான அக்குழாய் வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது.
எனினும், தக்க சமயத்தில் அது செயலிழக்க வைக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் மற்றோர் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவ்விமான நிலையத்தில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு, கூடுதல் பரிசோதனைக்காக 4 மணி நேரம் முன்கூட்டியே அங்கு வந்துச் சேருமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், இலங்கையில் 10 நாட்களுக்கு முன்பே அத்தாக்குதல்கள் குறித்து உளவுத் துறைக்கு எச்சரிக்கை கிடைத்திருந்தும், அந்நாட்டு அதிகாரிகள் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அப்படியொரு முன் எச்சரிக்கை தகவல் தமது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
எனினும் இப்போதைக்கு தாக்குதல்காரர்களை கைது செய்வதே முக்கியம் என்றாரவர்.
மற்றொரு நிலவரத்தில், தாக்குதல்காரர்களின் ஒருவன் தங்கும் விடுதியில் சிற்றுண்டிக்காக நேற்று காலை ஒரு வரிசையில் பொறூமையாக காத்திருந்தது தெரிய வந்திருக்கிறது.
காலை 8.30 மணிக்கு குடும்பங்கள் நிறைந்து காணப்பட்ட போது, உணவு சாப்பிடுவது போல கையில் இரு தட்டுகளுடன் அவன் முன் வரிசைக்கு வந்திருக்கின்றான்.
முதுகுப் பகுதியில் குண்டுகளால் நிரப்பப்பட்ட பை ஒன்றை வரிசையின் முன் பகுதிக்கு வந்ததும் அவன் வெடிக்கச் செய்து, அவனும் வெடித்துச் சிதறினான்.
இலங்கையில், இத்தாக்குதல்களை அடுத்து நேற்று மாலை 6 மணி தொடங்கி 12 மணி நேர ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் இரு நாட்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில், Facebook, Whatsapp, Istagram உள்ளிட்ட சமூக வலைத்தளச் சேவைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
பத்தாண்டுகளுக்கு முன் இலங்கையில் நடந்த இறுதிப் போருக்கு பின் அந்நாட்டில் நடந்த மிகப்பெரிய தாக்குதலாகவும் இது கருதப்படுகின்றது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather