← Back to list
அனைத்துலக பெண்கள் தினம்!
Mar 08, 2019
உலகெங்கிலும் அண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படும் அனைத்துலக பெண்கள் தினம், பெண்களின் சமூக பொருளாதார,கலாச்சார மற்றும் அரசியல் ரீதியிலான சாதனைகளைக் கொண்டாடும் ஒரு நாளாகத் திகழ்கிறது. இந்த நாள் பெண்களின் சுதந்திரம், பாதுகாப்பு,சமத்துவம் ஆகியவற்றை நிலைநிறுத்தும் நாளாகவும் விளங்குகிறது.ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாகநடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் கோரி தொடங்கப்பட்டது தான் இந்த பெண்கள் தினம். இப்போது அனைத்துலகபெண்கள் தினம் எவ்வாறு தோன்றியது மற்றும் அதன் வரலாற்று அம்சங்களைப் பார்ப்போம்...
1909ஆம் ஆண்டில் பிப்பிரவரி 28ஆம் தேதி அமெரிக்காவின், New York நகரம் தேசிய பெண்கள் தினத்தைக் கொண்டாடியது.
1910ஆம் ஆண்டில் Clara Zetkin என்ற பெண்ணுரிமை வழக்கறிஞர் ஒருவர் இந்நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும் என்றுமுன்மொழிந்தார்.
1917ஆம் ஆண்டில், மார்ச் 8ஆம் தேதி அனைத்துலக பெண்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.
1975ஆம் ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐக்கிய நாடுகளும் அத்தினத்தை பெண்களின் சம உரிமை மற்றும் உலக அமைதி நாளாகக் கருதி அதனைகொண்டாடத் தொடங்கினர்.
இன்று மார்ச் 8ஆம் தேதியை சில உலக நாடுகள் பொது விடுமுறையாகவும் அறிவித்துள்ளன.
இவ்வாண்டு உலகமெங்கும் #BalanceForBetter எனும் கருப்பொருளில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்நாளில் வாழ்வில் சாதனைப் படைத்து பலருக்கும் உதாரணமாகத் திகழும் பெண்களை நாம் நினைவுக்கூற வேண்டும்.
அந்த வகையில் நம் மலேசியாவில் சாதனை புரிந்த பெண்களில் நான் சந்தித்த ஒரு பெண்ணை பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ளவிரும்புகின்றேன்.
**********
*Bhaawaani Visunathan, 40.
--Adasta Network Sdn Bhd நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி (CEO).
--இணையத்தள குற்றச்செயல்(CyberCrime) தடுப்புப் பிரிவு நிபுணர்.
--MiBrand நாளிதழின் தொகுப்பாசிரியர்.
--5canale sdn.bhd இயக்குனர்.
--National Big Data Associationநின் துணைச் செயலாளர்.
--IPv6 Forum Malaysia பொருளாளர்.
--Malaysia South Asia Chamber Commerceசின் நிர்வாக செயலாளர்.
--Malaysia Chamber Service and commerceசின் செயலாளர்.
--Econet Consortium Malaysia/ Japan உறுப்பினர்.
இவர் இணையத்தள உலகில் ஒரு தனி சாதனைப் படைத்து வருகின்றார் என்றே கூற வேண்டும். Cyber Crime எனப்படும் இணைய குற்றப்பிரிவில் கைதேர்ந்த இவர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் தகவல்களைப் பாதுகாத்துவருகின்றார்.
சமுதாயத்தில் இத்துறை குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், மாணவர்களுக்கு இது தொடர்பான இலவசகருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றார்.
(Hotkey about a short briefing on what is cybercrime, how she started her career in this field, and the awards she received)
கடந்த 10 ஆண்டுகளாக இத்துறையில் அதிரடி படைத்து வரும் பவானிக்குப் பல விருதுகள் கிடைத்துள்ளன.
அவற்றில் சில...
15ஆம் ஆண்டும் பிதமர் துறையிலிருந்து இளம் பெண் தொழில்முனைவோர் விருது (Young Women Entrepreneurship Award) இவருக்குவழங்கப்பட்டது.
கடந்தாண்டு Binary பல்கலைக்கழகம், Entrepreneur of Excellence and Inspiring விருதை இவருக்கு வழங்கியது.
இரு பிள்ளைகளுக்குத் தாயான இவர், தனது குடும்பம், வேலை மற்றும் சமுதாயத்திற்கான தனது பங்கை சரிவர ஆற்றி வருவதுபெண்ணினத்திற்கே பெருமை சேர்க்கிறது.
பெண்களே!
பவானியைப் போல இன்னும் பல சாதனைப் பெண்கள் நம் மத்தியில் இருக்கின்றனர். அவர்களைப் போன்று நமது முழு திறனையும்பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுவோமாக. பெண்கள் பலவீனமானவர்கள் என்ற கருத்தை முறியடிப்போம். உலகத்தைக் குறை கூறுவதைதவிர்த்து, நமக்கான சமத்துவமும், பாதுகாப்பும், சுதந்திரத்தையும், எதிர்காலத்தையும் நாமே உருவாக்குவோம்.
அஞ்சாதே பெண்ணே!
உனக்கான எதிர்காலத்தை நீயே வித்திடு!
உலகிலுள்ள எல்லா பெண்களுக்கும் என மனமார்ந்த அனைத்துலக மகளீர் தின வாழ்த்துக்கள்!
#BalanceForBetter
#internationwomesday2019
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather