Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கிள்ளான் துணை மாவட்டத்தில் மட்டுமே CMCO!

Oct 08, 2020


Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 375 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 371 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை.

சபாவில் மிக அதிகமாக 271 சம்பவங்களும் சிலாங்கூரில் 36 சம்பவங்களும் கெடாவில் 16 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் ஐவர் அக்கிருமித் தொற்றுக்கு பலியாகியிருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

சிலாங்கூர், கிள்ளானில் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கிள்ளான் துணை மாவட்டத்தில் மட்டுமே. 

அது Kaparரை உட்படுத்தியிருக்கவில்லை என பாதுகாப்பு  விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்திருக்கிறார்.

சந்தைகள் குறிப்பிட்ட நேரம் வரை இயங்க அனுமதியுண்டு.

ஆயினும் இரவுச் சந்தைகள் இருக்காது.

உணவகங்கள், உணவுக் கடைகள், பொது போக்குவரத்துச் சேவைகள் குறிப்பிட்ட நேரம் வரை செயல்படலாம்.

இவ்வேளையில் கிள்ளான் துணை மாவட்டத்தில் சில பொருளாதாரத் துறைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதன் தொடர்பில் தேசிய பாதுகாப்பு மன்றமும் அனைத்துலக, வாணிக, தொழில்துறை அமைச்சும் கலந்து பேசி, மேல் விவரங்கள் வெளியிடப்படும் என்றாரவர்.

கிள்ளானைத் தவிர்த்து சபாவில் Sandakan, Tuaran, Papar ஆகிய மாவட்டங்களிலும் இன்று நள்ளிரவு முதல் CMCO அமலுக்கு வருகிறது.

மற்றொரு நிலவரத்தில், கிள்ளானில் 142 பள்ளிகள் இன்று தொடங்கி 23 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. 

அவை எந்தெந்த பள்ளிகள் என்பதை பெற்றோர்கள் கல்வியமைச்சின் அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கத்திலும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்திலும் சரி பார்த்துக் கொள்ளலாம். 

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி, KLIA 2-வில் இருந்து Nilai Sentral-லுக்கு பேருந்து வழிப் பயணித்தவர்களுக்கு COVID-19 தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக, அன்றைய தினம் இரவு 9 மணிக்கு NDH 2259 எண் கொண்ட MyBus பேருந்தில் ஏறியவர்கள், உடனடியாக சிரம்பான் சுகாதார அதிகாரிகளை தொடர்புக் கொள்ளுமாறு நெகிரி செம்பிலான் சுகாதார துறை வலியுறுத்தியிருக்கின்றது.

Covid-19 பரவல் அச்சம் காரணமாக பினாங்கு சிறைச் சாலை சுற்று வட்டாரத்தில் எந்த சாலைகளும் மூடப்படவில்லை. 

அச்சிறைச் சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு அக்கிருமித் தொற்று பீடித்திருப்பதால், சில சாலைகள் மூடப்பட்டிருப்பதாகப் பரவியுள்ள தகவல் உண்மையில்லை என மாநில காவல் துறை தெளிவுபடுத்தியது.

TNB வாடிக்கையாளர்களுக்கு இவ்வாண்டு இறுதி வரை மின்சாரக் கட்டணத்தில் 50 விழுக்காட்டு கழிவு வழங்கப்படும்.

அரசாங்கம் அறிவித்த PRIHATIN பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின்   கீழ், மக்களின் சுமையைக் குறைக்க அக்கழிவு கொடுக்கப்படுகிறது.

மாட்சிமை தங்கிய மாமன்னரை அடுத்த வாரம் நேரில் சென்று சந்திக்க தமக்கு அனுமதி கிடைத்திருப்பதாக Datuk Seri Anwar Ibrahim தெரிவித்திருக்கிறார்.

புதிய அரசாங்கத்தை அமைக்க தமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக அந்த PKR தலைவர் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather