← Back to list
Sg Gong மாசுபாடு: SOSMA-வின் கீழ் விசாரணை பரிசீலிக்கப்படுகிறது!
Sep 09, 2020
ரவாங், Sungai Gong ஆற்று நீர் மாசடைந்ததற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
அச்சம்பவத்தை திட்டமிடப்பட்ட குற்றச்செயலாக வகைப்படுத்தி அதனை பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் SOSMAவின் கீழ் விசாரிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தேசிய காவல் படைத் தலைவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட தரப்பின் சதிநாச வேலையாக இருக்கக்கூடிய சாத்தியம் உட்பட பல்வேறு கோணங்களில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Tan Sri Abdul Hamid Bador கூறினார்.
கடந்த வாரம் Sungai Gong ஆற்று நீர் தூய்மைக்கேடு அடைந்ததால், கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏறக்குறைய ஆயிரத்து 300 இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீர் விநியோகம் இன்று காலை வாக்கில் முழுமையாகச் சீரடைந்தது.
தற்போதைக்கு அவசியம் இல்லை!
நடப்பில் உள்ள MyKad அட்டை நவீன, உயரிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதால் அதற்குப் பதிலாகப் புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.
இருப்பினும் எதிர்காலத்தில் Mykad அட்டையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை ஆய்வு செய்யவும் நிபுணர்களின் கருத்துகளைப் பெறவும் தயார் என அது மேலும் குறிப்பிட்டது.
கடந்த மே மாதம் இணையம் வாயிலாக போலி Mykad அடையாள அட்டை விற்கப்பட்டது தொடர்பில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சு அவ்வாறு கூறியது.
மேலும் குற்றச்சாட்டுகள்!
முன்னாள் நிதியமைச்சர் Lim Guan Eng மீது வரும் வெள்ளிக்கிழமை நிலம் சம்பந்தப்பட்ட மேலும் இரு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் தொடர்பான அறிவிக்கை இன்று காலை அவரிடம் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு துணைத் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
COVID-19 தொடர்பான செய்திகள்.....
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக 24 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அச்சம்பவங்களில் 18 உள்நாட்டில் பரவியவை.
அவற்றில் 13 Sungai clusterரிலும் இரண்டு Benteng clusterரிலும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
மேலும் எழுவர் அக்கிருமித் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.
மரண எண்ணிக்கையில் மாற்றமில்லை; மொத்த மரண எண்ணிக்கை 128 ஆகும்.
இதனிடையே, நாட்டில் Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த வேண்டிய அவசியம் இருந்தால், அரசாங்கம் அதனைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் Dr. ஞானபாஸ்கரன் நடேசன் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்ததில் இருந்து நாட்டில் நேற்று மிக உயரிய எண்ணிக்கையாக நூறு Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
அவற்றில் உள்நாட்டில் பரவிய 85 சம்பவங்களில் 62 சபா, Benteng clusterரிலும் எஞ்சிய 23, கெடாவையும் பெர்லிசையும் உட்படுத்திய Sungai clusterரிலும் பதிவானது தொடர்பில் கேட்ட போது Dr. ஞானபாஸ்கரன் அவ்வாறு கருத்துரைத்தார்.
இவ்வேளையில், மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றத் தவறியது தொடர்பில் நேற்று நாடு முழுவதும் 221 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் மிக அதிகமாக 212 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
மற்றொரு நிலவரத்தில், வெளிநாட்டிலிருந்து மலேசியா திரும்பிய அமைச்சர் ஒருவர் தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொள்ள தவறியது மீதான காவல் துறையின் விசாரணை அறிக்கை முழுமைப் பெற்றுள்ளதாக PDRM தெரிவித்திருக்கிறது.
அது நாளை தேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather