← Back to list
புதிய வழமைகளுடன் நோன்புப் பெருநாள்!
May 23, 2020
நோன்புப் பெருநாள் என்றாலே, முதலில் நினைவிற்கு வருவது balik kampung- தான்!
அதன் சுகமே தனி என்றாலும், இவ்வாண்டு COVID-19 பெருந்தொற்று எனும் சவாலுக்கு மத்தியில் அதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது.
இருந்த போதிலும், புதிய வழமையின் கீழ் மலேசிய முஸ்லீம்கள் இயன்ற வரை வீட்டிலேயே நாளை அப்பெருநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் தான், சிலாங்கூர் கிள்ளானைச் சேர்ந்த Rafidah Rafik.
இவ்வாண்டு தனது நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் முற்றிலும் மாறுப்பட்டிருப்பதாக Rafidah கூறுகின்றார்.
குடும்பத்தாருடன் Rafidah
“என்னுடைய சொந்த ஊர் பேராக் Slim River. கடந்தாண்டு நாங்கள் ஏற்க்குறைய 40 பேர் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக கூடி, சந்தோஷமாக இப்பெருநாளைக் கொண்டாடினோம். ஒன்றாக சமைத்து சாப்பிட்டு பிறகு பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்ந்தோம்.ஆனால், இவ்வாண்டு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியவில்லை. கிள்ளானிலேயே கொண்டாடவுள்ளோம். சொந்த ஊர், உறவுக்காரர்கள் அனைவரையும் பார்க்க முடியவில்லையே, ஒன்றாக பெருநாளை கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் அதிகம் உள்ளது” என்றார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்டு, வழக்கம் போல் balik kampung செய்ய முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், முடிந்த வரை இவ்வாண்டுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட தனது குடும்பம் தயாராகியிருப்பதாக Rafidah தெரிவித்தார்.
இதனிடையே, Johor Kulai-யைச் சேர்ந்த Norhidayah கூறுகையில்..….
“இந்த வருடம் எனக்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுப்பு. அதுவும் அந்த பொது விடுமுறையில் மட்டும் தான். இந்த ஆண்டு எங்கும் வெளியில் செல்ல முடியாத காரணத்தால், நான், துணி மணிகள், பலகாரங்கள் போன்ற பெருநாளுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் இணையம் வழி வாங்கி விட்டேன்” என தெரிவித்தார்.
குடும்பத்தாருடன் Norhidayah
நெகிரி செம்பிலான் போர்ட்டிக்சனை சேர்ந்த Roscilah Binti I Naggararu பேசும் போது....
குடும்பத்தாருடன் Roscilah
“இந்த வருடம் ஆடம்பரக் கொண்டாட்டம் இல்லை; எளிமையான முறையில் தான் கொண்டாடவுள்ளோம். குறிப்பாக, அம்மா வீட்டுக்குப் போக முடியவில்லை என்ற ஏக்கம் இருக்கின்றது. அம்மா வீடு அருகில் தான் உள்ளது. ஆனாலும், அது சிவப்பு மண்டலப் பகுதியென்பதால், அங்கு செல்லவும், அம்மாவை அங்கிருந்து அழைத்து வரவும் இயலாத சூழ்நிலை. இப்போதைக்கு கைப்பேசி வீடியோ அழைப்பின் வாயிலாக அம்மாவுடன் பேசி வருகின்றேன். பெருநாள் என்றாலே, அனைவரும் ஒன்றாக சேர்ந்து தான் பலகாரங்கள் மற்றும் 'லெமாங்' உள்ளிட்ட உணவுகளை தயாரிப்போம். ஆனால், இவ்வாண்டு அதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. நோன்புப் பெருநாளுக்கு முந்தைய நாள் கடைசி நோன்பை உடன்பிறந்தவர்கள் மற்றும் குடும்பத்தாருடன் துவக்குவது தான் வழக்கம். அது இவ்வாண்டு இல்லை” என கூறினார்.
சூழ்நிலைகள் மாறுபட்டாலும், அனைவரது பாதுகாப்பு கருதி, அரசாங்கம் அறிவித்துள்ள பெருநாள் கால விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவார்கள் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என Rafidah, Norhidayah மற்றும் Roscilah ஆகியோர் தெரிவித்தனர்.
#kitajagakita என்ற வாசகத்திற்கு ஏற்ப, இக்கிருமித் தொற்றின் ஆபத்து அறிந்து, அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.
இறுதியாக, வாசகர்களுக்கு அனைவருக்கும் Astro Radio News-சின் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்!
சந்திப்பு & தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather