Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

MCO நீட்டிப்பு: PRESMA & PRIMAS கருத்து!

Apr 24, 2020


நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO 4ஆம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

PRESMA தலைவர் Dato' Haji Jawahar Ali

 

அம்முடிவு தாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான் என, மலேசிய இந்திய முஸ்லீம் உணவக நடத்துநர் சங்கம் PRESMA தலைவர் Dato' Haji Jawahar Ali கூறியிருக்கின்றார்.

நாடு COVID-19 கோறனி நச்சில் தொற்றில் இருந்து முழுமையாக விடுபடுவதை உறுதிச் செய்ய அம்முடிவுக்கான அவசியத்தையும் PRESMA உணர்ந்திருக்கிறது என்றாரவர்.

நடப்பில் PRESMA-வின் கீழ் உள்ள உணவகங்கள், தேவைப்படுவோருக்கு குறிப்பாக MCO-வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, MCO கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் PRESMA  மேற்கொண்டு வரும் உதவிகள் பற்றியும், Dato Haji Jawahar Ali இவ்வாறு விளக்குகின்றார்.

PRESMA, JAWI Food Bank-குடன் இணைந்து Selangor Mansion, Malayan Mansion, Main Tower, City One Plaza, மற்றும் Masjid India சுற்று வட்டாரப் பகுதி அன்பர்கள் அனைவருக்கும் தினந்தோறும் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றை வழங்கி வருகின்றது. தினந்தோறும் ஏறக்குறைய ஈராயிரத்திற்கும் அதிகமானோருக்கு காலை சிற்றுண்டிகள் விநியோகிக்கப்பட்டு வருவகின்றது. தேவைகள் அதிகம் உள்ளன. இருந்த போதிலும், எங்களால் ஆன உதவிகளை வழங்கி வருகின்றோம் என தெரிவித்தார்.

இவ்வேளையில், இந்த MCO நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து, ராகா செய்தி மலேசிய இந்திய உணவக நடத்துநர்கள் சங்கம் PRIMAS-சையும் தொடர்புக் கொண்டது.

அதன் தொடர்பில் பேசிய அச்சங்கத்தின் தலைவர் முத்துசாமி திருமேனி MCO மே 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது சவாலான ஒன்று என குறிப்பிட்டார்.

PRIMAS தலைவர் முத்துசாமி திருமேனி (Photo Credit: FMT)

என்றாலும், அரசாங்கத்தின் அந்நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்து தான் ஆக வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

இக்காலக்கட்டத்தில் தமது தரப்பு எதிர்நோக்கியுள்ள அந்த சவால் பற்றி அவர் இவ்வாறு கூறினார்.

மிகப் பெரிய பாதிப்பு ‘cash-flow’ தான், வியாபாரம் நடைபெறாததால் கையில் ரொக்கப் பணக் கையிருப்பு கணிசமாக குறைந்திருக்கும். ரொக்கம் இருந்ததால் தான் அடுத்து நாங்கள் தொழிலை நடத்துவதற்கு ஓர் அடிப்படை இருந்திருக்கும்என தெரிவித்தார்.

அதே சமயம், MCO மீட்டுக் கொள்ளப்பட்ட பிறகு, உணவகங்களுக்கு பழையபடி வாடிக்கையாளர்களின் வருகையை உறுதிச் செய்யவும், உணவக நடத்துநர்கள் இப்போதே தயாராக வேண்டிய சவாலையும் எதிர்நோக்கியுள்ளனர் என்றாரவர்.

எனவே, நாட்டின் நடப்பு சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு, தொழில்துறை மாற்றத்திற்கு ஏற்ப, உணவக நடத்துநர்கள் புதிய அணுகுமுறைகள் குறித்து இப்போதே யோசிக்க தொடங்க வேண்டும் என்றும் முத்துசாமி கேட்டுக் கொண்டார்.

An article by: Sauriyammal Rayappan


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather