Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அமைச்சரவை ஓர் அலசல்!

Mar 10, 2020


பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தலைமையிலான புதிய அமைச்சரவையில் துணைப் பிரதமர் இல்லாதது மலேசியர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுதியிருக்கின்றது.

Astro வானொலி செய்தி ஆசிரியர் மோகனதாஸ் முனியாண்டி

பிரதமரின் அம்முடிவுக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது பற்றி நமக்கு விவரிக்கின்றார், Astro வானொலி செய்தி ஆசிரியர் மோகனதாஸ் முனியாண்டி...

"துணைப் பிரதமர் பதவி இல்லை என்பது நமக்கு தான் புதிதே தவிர சட்டத்திற்கு அல்ல. காரணம், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் துணைப் பிரதமர் பதவி என்று ஒன்று இல்லை. ஆனால், காலம் காலமாக பிரதமருக்கு துணையாக ஒருவர் நியமிக்கப்பட்டு வந்திருக்கின்றார். அந்த மரபு இம்முறை உடைக்கப்பட்டிருக்கிறது. Perikatan Nasional-லில் UMNO அதிக இடங்களைக் கொண்டிருக்கின்றது. ஒருவருக்கு கொடுத்து விட்டு இன்னொருவருக்கு கொடுக்காமல் போனால் கூட்டணிக் கட்சிகளிடையே மனஸ்தாபம் வரலாம். எனவே இடியாப்ப சிக்கலைத் தவிர்க்க பிரதமர் அவ்வாறு முடிவெடுத்திருக்கலாம். 4 மூத்த அமைச்சர்கள் பிரதமருக்கு உதவியாக நியமிக்கப்பட்டிருப்பதால் அவரின் பணிச் சுமைகள் குறையலாம். தற்போதைக்கு கூட்டணியைப் பலப்படுத்துவதே அவரின் தலையாயப் பணியாக இருக்கும் என்பதால், இது ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலே இருக்கிறது எனலாம்" என்றாரவர்.

இதனிடையே, Perikatan Nasional-லின் ஓர் அங்கமான மஇகாவுக்கு ஒரே ஒரு முழு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேட்ட போது....

"சற்று ஏமாற்றம் தான். என்னதான் ம.இ.கா ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டிருந்தாலும், இன்னொரு முழு அமைச்சரவாது கிடைக்கும் என்றே நான் எதிர்பார்த்தேன். யாரைவாது செனட்டாரக நியமித்து அப்பதவி கொடுக்கப்பட்டிருக்கும் என்று. ஏன் என்றால் MCA-வுக்கு கூட 2 MP-கள் தான் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் முழு அமைச்சர், இன்னொருவர் துணை அமைச்சர். மேலும் இருவர் செனட்டர்களாக நியமனம் பெற்று துணை அமைச்சர்களாகி உள்ளனர். அதே போல் கூடுதலாக துணை அமைச்சர் பதவியாவது கிடைத்திருக்கும் என எதிர்பார்த்தேன். கடந்த Pakatan ஆட்சியின் போது நால்வர் முழு அமைச்சர்களாகவும், ஒருவர் துணை அமைச்சரகாவும் இருந்தனர். அப்போதே எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல, என்ன செய்கிறார்காள் என்பதே முக்கியம் என்ற பேச்சு இருந்தது. ஆக, இப்போது இருவர் இருக்கின்றனர். சமூகத்துக்கு அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வார்காள் என எதிர்பார்ப்போம்" என அவர் கூறினார்.

பிரதமர் நேற்று அறிவித்த அந்த அமைச்சரவைப் பட்டியலில், Tapah நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசிய துணைத் தலைவருமான Datuk Seri M. Saravanan மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளர்.

ஜொகூர் Segamat நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Dr Santhara Kumar, கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

Perikatan Nasional-லின் மற்றோர் உறுப்புக் கட்சியான மசீசாவுக்கு ஒரே ஒரு முழு அமைச்சர் பதவியும்,  மூன்று துணை அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வேளையில், முந்தைய தேசிய முன்னணி அரசின் சில பழைய முகங்கள் அமைச்சரவைக்கு திரும்பியிருக்கின்றனர்.

அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர், வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள Datuk Seri Hishamuddin Hussein ஆவார்.

மற்றொருவர், Khairy Jamaluddin; இவருக்கு அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Khairy-யின் மறுபிரவேசம் பற்றி இவ்வாறு கூறுகின்றார் மோகனதாஸ் முனியாண்டி...

"பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் செல்வாக்குக் குறையாமல் இருக்கும் ஒரு சிலரில் முக்கியமானவர் Khairy Jamaluddin. குறிப்பாக கடந்த முறை இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த போது மிகவும் பிரபலமானவராக வலம் வந்தவர். இந்த முறையும் அவருக்கு அதே துறையே கிடைக்கும் அல்லது கல்வி அமைச்சராகக் கூட அவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு இருந்தது. ஆனால் அறிவியல் தொழில்நுட்பத் துறை கிடைத்திருக்கிறது. கண்டிப்பாக இதிலும் அவர் மிளிருவார் என தாராளமாகக் கூறலாம். அவரால் இனி அறிவியல் அமைச்சு பிரபலமானாலும் ஆச்சரியப்படுதற்கில்லை" என தெரிவித்தார்.

இவ்வேளையில், Datuk Seri Mohamed Azmin Ali மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்தும் மோகனதாஸ் கருத்து பகிர்ந்தார்.

"Pakatan ஆட்சி கவிழ்ந்து, Perikatan Nasional ஆட்சி அமைத்ததில் Azmin Ali-க்கும் பங்குண்டு என்பது பரவலாக தெரிந்த ஒன்றே. எனவே அதற்கு கைமாறாக அவருக்கு மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு எழுவதை தடுக்க முடியாது. என்றாலும், முன்பு சிலாங்கூர் Menteri Besar-ராக இருந்த அனுபவம், முந்தைய Pakatan ஆட்சியில் பொருளாதார அமைச்சராக இருந்த அனுபவம் அவருக்கு கைக்கொடுக்கலாம். ஆனால், அண்மைய அரசியல் நெருக்கடியால் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவே கூறலாம். மூத்த அமைச்சராக மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பெரிய சவால் Azmin-னுக்கு காத்திருக்கிறது" என்றாரவர்.

மேலும் ஒரு பழைய முகம்,  தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள Datuk Seri Ismail Sabri Yaakob ஆவார்.

புதிய அமைச்சரவையில், அமைச்சர் அல்லாத இருவருக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன; அதில் ஒன்று நிதியமைச்சர் பதவி; மற்றொன்று, பிரதமர் துறையின் கீழ் இயங்கும் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் பதவியாகும்.

இந்த அமைச்சரவையின் சில முக்கிய அம்சங்கள்: 

  • துணைப் பிரதமர் இல்லை.
  • நான்கு மூத்த அமைச்சர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.
  • இம்முறை ஆக அதிகமான அமைச்சர்கள் Johor-ரைச் சேர்ந்தவர்கள்.
  • ஐந்து பெண்கள் அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.

Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather