← Back to list
மலேசியர்களில் சிலர் அஞ்சுகின்றனர்!
Jan 01, 2021
மலேசியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் Covid-19 தடுப்பூசி குறித்து இன்னும் அச்சப்படுகின்றனர்.
அல்லது அதன் மீது சந்தேகம் கொள்வதாக சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரிய வந்திருக்கிறது.
அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் Covid-19 தடுப்பூசியால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை நினைத்து அஞ்சுவதும் தெரிய வந்துள்ளது.
அக்கிருமித் தொற்றுக்கான தடுப்பூசி ஆக்ககரமானதோடு பாதுகாப்பானது என அரசாங்கம் கூறியிருக்கும் நிலையில் அவர்களிடையே அந்த அச்சம் எழுந்துள்ளது.
இவ்வாண்டு மலேசியர்களில் குறைந்தது 80 விழுக்காட்டினருக்கு அத்தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு பள்ளித் தவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போல வரும் 20 ஆம் தேதி தொடங்கும்.
தங்களது பிள்ளைகளின் படிப்பு குறித்து பல பெற்றோர் கவலை தெரிவித்திருப்பதை அடுத்து பள்ளிகள் திறப்பு தேதியை நிலைநிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.
அதே சமயம் கல்வியமைச்சின் கீழ் பதிந்து கொண்டுள்ள தனியார் மற்றும் அனைத்துலக கல்விக் கழகங்கள் தத்தம் அட்டவணைகளைப் பொருத்து திறக்கப்படும் என அவர் சொன்னார்.
உள்நாட்டு உயர்க்கல்விக் கழக மாணவர்கள் மார்ச் முதல் தேதியில் இருந்து கட்டங் கட்டமாகத் தத்தம் கல்விக்கூட வளாகங்களுக்குத் திரும்ப அனுமதியளிக்கப்படுகிறது.
ஜொகூரில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களிடம் போலி Covid-19 பரிசோதனை முடிவுகள் விற்கப்படுவதாகக் கூறப்படுவதை மாநில காவல் துறை விசாரித்து வருகிறது.
அம்மருத்துவ பரிசோதனை முடிவுகள் அடங்கிய பத்திரங்கள் தலா 500 ரிங்கிட் வரை விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அம்மோசடி தொடர்பில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜொகூரில் PDRMமைச் சேர்ந்த காவல் வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் என 76 பேருக்கு Covid-19 பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிலருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்காகக் காத்திருப்பதால், அவ்வெண்ணிக்கை உயரலாம் என மாநில காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.
மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் உத்தேச அதிவிரைவு ரயில் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்களுக்கு இரு நாடுகளிடையே இணக்கம் காணப்படாததே அதற்குக் காரணம்.
கூட்டு அறிக்கையொன்றில் தத்தம் பொறுப்புகளைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்ட அவ்விரு நாடுகளும் அத்திட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்படும் விளைவுகளுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறின.
மாட்சிமை தங்கிய மாமன்னரைத் தவிர்த்து தேசிய கீதம், Jalur Gemilang கொடி ஆகியவற்றை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை பதிவேற்றியிருந்த Instagram கணக்கு குறித்து Bukit Aman விசாரித்து வருகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather