← Back to list
Kulai சிறையில் இரு கைதிகளுக்கு Covid-19!
Dec 30, 2020
Covid-19 தொடர்பில் நாட்டில் இன்று ஆயிரத்து 870 புதிய சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
ஜொகூரில் ஆக அதிகமாக 600க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
745 பேர் அத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
ஆறு மரணங்கள் பதிவாகி மரண எண்ணிக்கை 463 ஆக உயர்ந்துள்ளது.
_____
ஜொகூர், Kulai காவல் நிலையத்தின் சிறையைச் சேர்ந்த இரு கைதிகளுக்கு Covid-19 உறுதிப்படுதப்பட்டதைத் தொடர்ந்து, அச்சிறைச்சாலையில் உள்ள 50 கைதிகளும் தனைமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்விருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இரு காவல் வீரர்களும் தனிமையில் இருக்கும்படி உத்தரவிடத்தப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை தலைவர் தெரிவித்தார்.
______
கடந்த நவம்பர் 30ஆம் தேதி வரை தேசிய கல்வி சேமிப்புத் திட்டம் SSPN வாயிலாக தேசிய உயர்கல்வி நிதிக்கழகம் PTPTN சுமார் 1.3 பில்லியன் ரிங்கிட்டை ஈட்டியுள்ளது!
இது இவ்வாண்டுக்கு வைக்கப்பட்டிருந்த 1.5 பில்லியன் ரிங்கிட் இலக்கை விட சற்று குறைவே என PTPTN தலைவர் Wan Saiful Wan Jan கூறியிருக்கின்றார்.
மூன்று லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமான SSPN கணக்குகள் திறக்கப்பட்டு, இவ்வாண்டின் 4 லட்சம் கணக்குகளுக்கான இலக்கில் 96.32 விழுக்காட்டை எட்டியிருப்பதாக அவர் சொன்னார்.
______
அடுத்தாண்டு மலாக்காவிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் 50 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் சவாலை விரிவுபடுத்துமாறு, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கேட்டுக் கொண்டார்.
மலாக்காவில் தான் அதிகமான மாணவர்கள் அதிக உடல் எடை பிரச்னையை எதிர்நோக்கியிருக்கும் தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து அவர் அவ்வாறு கூறியிருக்கின்றார்.
இவ்வாண்டு 12ஆம் தேதி Telok Masசில் அறிமுகம் கண்ட அந்த திட்டத்தில் சுமார் 170 மாணவர்கள் பங்கு கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
______
பினாங்கு Georgetownநில் தனக்குப் பிறந்த பெண் குழந்தையை அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 13ஆவது மாடியிலிருந்து வீசியெறிந்த சந்தேகத்தின் பேரில் கைதான 18 வயது பெண்ணை பிணையில் விடுவிக்க உயர் நிதிமன்றம் இரண்டாவது முறையாக மறுத்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் முன்னதாக சம்பந்தப்பட்ட கல்லூரி மாணிவியும் அவரது காதலனும் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather