← Back to list
புதிய வழமைகளைத் தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும்!
Dec 30, 2020
நாடு Covid-19னுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அக்கிருமித் தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் புதிய வழமைகளைத் தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும்.
உலகை இன்னமும் உலுக்கிக் கொண்டிருக்கும் Covid-19 கூடிய விரைவில் தணியும் எனத் தோன்றவில்லை என மலேசிய பொது சுகாதார மருத்துவர்கள் சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar தெரிவித்தார்.
“ Kita mestilah sentiasa bersedia untuk hidup bersama dengan Covid dengan cara mengatur kerja atau jadual kita harian kita. Contohnya, kita tidak perlu pergi ke tempat awam jika tiada keperluan yang mustahak”
எனினும் அடுத்தாண்டு Covid-19 தடுப்பூசி பெறப்பட்டதும் நிலைமையில் கட்டங் கட்டமாக முன்னேற்றம் ஏற்படலாம் என்றாரவர்.
சிலாங்கூர், Kuala Langatட்டில் உள்ள Banting பொதுச் சந்தை கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்ய ஏதுவாக பத்து நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
அங்கு Covid-19 சம்பவங்கள் கண்டறியப்பட்டதோடு, தர செயல்பாட்டு நடைமுறைகள் மீறப்பட்டதை அடுத்து மாநில சுகாதாரத்துறை அந்த உத்தரவை வெளியிட்டது.
பேராவில், மனித வள மேம்பாட்டு நிதிக் கழக ஊழியர் ஒருவருக்கு Covid-19 பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை அடுத்து சம்பந்தப்பட்ட அலுவலகப் பகுதிகளில் இரு நாட்களுக்கு கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்யும் பணிகள் தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Covid-19னால் பாதிக்கப்பட்டுள்ள நபர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
சிலாங்கூர், Shah Alamமில் பிரதான நீர்க் குழாய் உடைந்ததால் கிள்ளான் மற்றும் Shah Alamமில் சில பகுதிகளில் தடைபட்டிருந்த நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாகச் சீரடைந்ததாக Air Selangor கூறியது.
Damansara Utamaவில் உடைந்த நீர்க் குழாயைச் சரி செய்யும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு நீர்க் குழாய் உடைந்ததால் Petalingங்கில் 43 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
பஹாங், ஜொகூர், திரங்கானு, சபா மாநிலங்களின் சில பகுதிகளில் மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்விடங்களில் இவ்வார இறுதி வரை பலத்த காற்றுடன் கூடிய அடை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது.
ஜொகூர், Mersingங்கில் குப்பைக் கூளங்கள் பிரச்னையைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
அம்மாவட்டத்தில் பொது இடங்களில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதாக மாநில சுல்தான் முன்னதாக தமது சினத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather