← Back to list
சில தளர்வுகள் மீட்டுக் கொள்ளப்படலாம்!
Dec 29, 2020
முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் உள்ள Covid-19 நோயாளிகளுக்கு தத்தம் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்குவது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது.
சுகாதார தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah அவ்வாறு கூறியிருக்கிறார்.
இருப்பினும் வீடு, அறை, கழிவறை, உரிய மருத்துவ பரிசோதனைக் கருவிகள், கணிகாணிப்பு உள்ளிட்ட சில அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
“Yang pertama kita kena lihat ataupun nilai kesesuaian rumah, bilik dan bilik air dan sebagainya. Yang kedua iaitu, kita kena lihat juga kepada health assesment tool dan bagaimana petuga-petugas kita dapat memantau kesihatan seseorang itu di rumah.”
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, CMCO நாட்டில் Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த உதவியிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.
இதற்கு முன் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO-வை அமல்படுத்திய போது சுகாதார ரீதியில் அக்கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது வெற்றியடைந்தது உண்மைதான்.
ஆயினும் நாட்டின் பொருளாதாரத்தில் MCO கடும் தாக்கங்களை ஏற்படுத்தி விட்டது.
அதனால் தான் அது பின்னர் CMCO-வாக மாற்றப்பட்டது.
CMCO வந்த பிறகும் Covid19 பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாக சுகாதாரத் தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah சுட்டிக் காட்டினார்.
CMCO இல்லாமல் மட்டும் இருந்திருந்தால், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு அப்பெருந்தொற்றின் எண்ணிக்கை நாட்டில் இந்நேரம் 40 லட்சத்தை தொட்டிருக்கும் என்றார் அவர்.
"Sebab itu kita buat PKPB yang mana terbukti ia masih berjaya mengawal penularan Covid-19. Jika tidak dilaksanakan (PKPB) dijangka rakyat negara ini yang dijangkiti akan meningkat ke angka empat juta pesakit namun hari ini ia hanya 106,690 kes dilaporkan,"
இவ்வேளையில், படிப்படியாக அரசாங்கம் சில தளர்வுகளை வழங்கியிருந்தாலும், Covid-19 பரவல் சங்கிலியாகத் தொடர்வதைத் தடுக்க, பொதுமக்கள் தர செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுவது மிக முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் SOPக்களைப் பின்பற்றத் தவறினால், தற்போது வழங்கப்பட்டுள்ள சில தளர்வுகள் மீட்டுக் கொள்ளப்படலாம் என அரசாங்கம் எச்சரித்திருக்கிறது.
அது சுகாதார அமைச்சின் மதிப்பீட்டைப் பொருத்தது என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.
உதாரணமாக மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்க கொடுக்கப்பட்டுள்ள அனுமதி குறித்து அமைச்சு இரு வாரங்களுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்வதை Datuk Sri Ismail Sabri Yaakob சுட்டிக் காட்டினார்.
அண்மையில் லங்காவி மற்றும் மலாக்கா மிருகக்காட்சி சாலையில் SOP மீறப்பட்டது தொடர்பிலான காணொளிகள் வெளியானதை அடுத்து அவர் அவ்வாறு நினைவுறுத்தினார்.
Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தர செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய பொது இடங்களில் சோதனை நடவடிக்கைகளும் கண்காணிப்புகளும் வலுப்படுத்தப்படும்.
பொதுமக்களில் சிலர் SOPக்களை மீறி அலட்சியம் காட்டி வருவதைச் சுட்டிக் காட்டி தேசிய காவல் படைத் தலைவர் அவ்வாறு நினைவுறுத்தினார்.
பல்கலைக்கழக வளாகங்களுக்கு வெளியே உள்ள மாணவர்களின் நலனைக் கையாள, உயர்க்கல்வி அமைச்சு சிறப்புப் பிரிவொன்றை ஏற்படுத்தவிருக்கிறது.
அப்பிரிவு கவனத்தில் கொள்ளவிருக்கும் விஷயங்களில் மாணவர்களுக்கான வாடகை வீடு சம்பந்தப்பட்ட விவகாரங்களும் அடங்கும்.
அதே சமயம் மாணவர்களும் வீட்டு உரிமையாளர்களும் தொடர்பு கொள்ள ஏதுவாகவும் மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளைக் கண்டறியவும் இணைய அகப்பக்கம் ஒன்றும் உருவாக்கப்படும் என அமைச்சு கூறியது.
சிலாங்கூர், Shah Alamமில் முக்கிய நீர்க் குழாய் உடைந்திருப்பதால், கிள்ளான்/Shah Alam, Petaling மாவட்டங்களில் 130 பகுதிகளில் நீர் விநியோகம் இன்று பிற்பகலில் இருந்து தடைபடும்.
நீர்க் குழாயைச் சரி செய்யும் பணிகள் இரவு 9 மணிக்கு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதன் பின் கட்டங் கட்டமாக நீர் விநியோகம் வழக்கத்திற்குத் திரும்பும் எனவும் Air Selangor தெரிவித்திருக்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather