← Back to list
Covid-19: முதலாளிகள் முக்கிய பங்காற்ற வேண்டும்!
Covid-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முதலாளிமார்கள் முக்கிய பங்களிக்க வேண்டும்!
அண்மைய காலமாக வேலையிடங்களில் ஏற்படும் Cluster சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், சுகாதார அமைச்சு அவ்வாலோசனையை வழங்கியிருக்கின்றது.
அதோடு Selangor, Negeri Sembilan, Wilayah Persekutuan, Pulau Pinang, Sabah போன்ற மாநிலங்களில் அந்நிய தொழிலாளர்களுக்கு Covid-19 பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வெண்ணிக்கை இனியும் அதிகரிக்கும் என அமைச்சு கணித்துள்ளது.
எனவே SOPக்களைப் பினபற்றி கூடுதல் கவனமுடன் இருந்தால் தான், பெருகி வரும் clusterகளை கட்டுப்படுத்த முடியும் என அமைச்சு கேட்டுக் கொண்டது.
_______
புதிய வழமை குறித்து நாட்டு மக்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருப்பதைக் காண முடிவதாக சுகாதார துறை தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.
சுமார் 93 விழுக்காட்டினரால் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் சுவாசக் கவசம் போடுமாறு கண்டிக்க முடியும் என்பது சுகாதார அமைச்சின் கண்காணிப்பில் தெரிய வந்ததாக அவர் சொன்னார்.
தனிமனித இடைவெளியைப் பின்பற்றுமாறும், சுத்தமாக இருக்குமாறும் 90 விழுக்காட்டினர் தங்களது குடும்பத்தினரைக் கண்டித்து வந்துள்ளனர்.
_____
கெடாவில், Covid-19 தொற்று கண்ட 25 பேர் சமூக பாதுகாப்பு அமைப்பின் கீழ் நிதி பெற்று பயனடைந்துள்ளனர்.
அவர்களுக்கு அத்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் நாள் வரை, மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வரும் ஒவ்வோர் நாளுக்கும் 90 விழுக்காடு வரை சம்பளத்திலிருந்து அவர்களுக்குப் பணம் சென்று சேறுவதாக மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.
_____
சிலாங்கூர், PJவில் தம்மைப் பிடிக்க வந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடமிருந்து தப்பியோட முயன்ற காரோட்டி ஒருவர், பின்னர் சாலை நெரிசலில் சிக்கிக் கொண்டார்.
போதை மருந்து உட்கொண்டிருந்த அவரும் அவருடன் பயணித்த பெண் ஒருவரும் தப்பியோட முயன்றதாக நம்பப்படுகின்றது.
______
கிளாந்தானில் வெள்ள நிலவரத்தில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகின்றது!
இன்று காலை 9 மணி வரியிலான நிலவரப்படி அம்மாநிலத்தில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் மட்டுமே தற்காலிக துயர் துடைப்பி மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather