← Back to list
ஆயிரத்து 500க்கும் அதிகமான சம்பவங்கள்!
Dec 24, 2020
நாட்டில் Covid-19 தொடர்பில் புதிதாக ஆயிரத்து 581 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக சுமார் 500 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அடுத்து KLலில் 379 சம்பவங்களும் சபாவில் 249 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் இருவர் பலியாகியிருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிகை 446 ஆக அதிகரித்துள்ளது.
தங்களது அந்நிய தொழிலாளர்களுக்கு Covid-19 மருத்துவ பரிசோதனை செய்யாத முதலாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் எச்சரித்திருக்கிறார்.
அக்கிருமித் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சில முதலாளிகள் ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதே வேளை, தங்களது ஊழியர்கள் மருத்துவமனைகளில் Covid-19னுக்கான சிகிச்சை பெற்று வந்தால், அதற்கான செலவினத்தையும் அவர்களே கட்டாயம் ஏற்க வேண்டும் என்றாரவர்.
ஜொகூரில் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட Tembok Gajah clusterரில் நேற்று வரை சுமார் 450 Covid-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் சிறைக் கைதிகளும் பணியாளர்களும் என மாநில அரசு தெரிவித்தது.
பேராவில் Covid-19னால் நலிவடைந்துள்ள சுற்றுலாத் துறையை ஆக்ககரப்படுத்த மாநில அரசு 1 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியிருக்கிறது.
பதிவு பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஒரே தடவையாக 700 ரிங்கிட் வழங்கப்படவிருக்கிறது.
சுற்றுலா, பயண நிறுவனங்களுக்கு ஈராயிரம் ரிங்கிட் கொடுக்கப்படும்.
சபாவில், Taman Telipok Riaவில் கடுமையாக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை இன்றுடன் முடித்துக் கொள்ள அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
Covid-19னுக்கான SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 169 பேர் கைது செய்யப்பட்டனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather