Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

புதிதாக ஆயிரத்து 300க்கும் அதிகமான சம்பவங்கள்!

Dec 23, 2020


Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக ஆயிரத்து 348 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் ஆயிரத்து 332 உள்நாட்டில் பரவியவை.

மேலும் ஐவர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.

அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 444 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 710 பேர் Covid-19னில் இருந்து விடுபட்டுள்ளனர்.

Covid-19 தடுப்பூசிக்கான செலவினம் குறித்து விவாதம் செய்வதை அனைத்து தரப்பினரும் நிறுத்திக் கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டு கொண்டுள்ளது. 

அது தடுப்பூசி பெறுவதில் பொதுமக்கள் தயக்கம் காட்ட காரணமாகி விடலாம் என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார். 

"Saya pohon kepada semua pihak samaada ahli-ahli parlimen daripada kerajaan atau pembangkang atau rakyat sendiri untuk kita serahkan kepada parlimen dan PAC untuk saya memberikan taklimat sebab kalau sekiranya perkara ini berlanjutan saya khuatir bahawa ia akan menjejaskan keyakinan rakyat Malaysia untuk menerima vaksin tersebut"  

அத்தடுப்பூசிக்கான செலவினம் மிகைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், அவர் அவ்வாறு சொன்னார். 

தடுப்பூசி விநியோகிப்பாளர்களின் விதிமுறைகளை மீறுவதாக இருக்கும் என்பதால், அத்தடுப்பூசி செலவின விவர்ங்களை வெளியிட முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

பினாங்கு, Persiaran Paya Terubong, Relauவில் உள்ள Kondo Sierra East அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் இதற்கு முன் கடுமையாக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முன் கூட்டியே இன்றுடன் முடித்துக் கொள்ளப்படுகிறது.

மற்றொரு நிலவரத்தில், ஜொகூர், Muarரில் உள்ள புனர்வாழ்வு மையத்தில் நாளை முதல் EMCO அமலுக்கு வருகிறது.

அது ஜனவரி 6 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

கிரிஸ்மஸ் பண்டியையொட்டி நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளை அவர்களது குடும்பத்தினர் நேரடியாகச் சென்று காண அனுமதி இல்லை.

கைதிகள்-குடும்பத்தினர் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக சிறைச் சாலைத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Covid-19 பரவலைத் தடுக்க Skype மற்றும் தொலைபேசி அழைப்பு வாயிலாக கைதிகளை அவர்களது குடும்பத்தினர் தொடர்பு கொள்ள அனுமதியளிக்கப்படும். 

சபா, Tawauவில் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தவறிய பொது உயர்க்கல்விக் கழக மாணவர்கள் இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தங்களது தவற்றை ஒப்புக் கொண்ட அவர்களுக்குத் தலா ஆயிரத்து 200 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. 

Covid-19னுக்கான SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 230 பேர் கைது செய்யப்பட்டனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather