Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சுகாதாரப் பணியாளர்களுக்கு COVID-19 !

Dec 18, 2020


சிலாங்கூர் கிள்ளான் Tengku Ampuan Rahimah மருத்துவமனையைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு COVID-19 தொற்று பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தொற்றால் பாதிக்கப்பட்ட அம்மருத்துவமனையின் 50 சுகாதாரப் பணியாளர்கள் சிகிச்சைக்காக Sungai Buloh மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அம்மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சிகிச்சைகள்  வழக்கம் போல் தொடர்கின்றன; நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், மாநில சுகாதார துறை தெரிவித்தது.

முக்கிய அலுவல் இல்லாத பட்சத்தில், அம்மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் என்றும், மருத்துவமனை தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாட்டில் நேற்று ஒரு நாளில் பதிவான ஆயிரத்து 220 புதிய COVID-19 சம்பவங்களில் பாதிக்கும் மேற்பட்டவை கிள்ளான் பள்ளத்தாக்கை உட்படுத்தியிருக்கின்றன.

அதில் 368 சம்பவங்களுடன் சிலாங்கூர் முன்னணி வகிக்கிறது; கோலாலம்பூரில் 297 சம்பவங்கள் பதிவாகின. 

சுற்றுலா பற்றுச்சீட்டுகள்!

சிலாங்கூரைச் சேர்ந்த ஏறக்குறைய மூவாயிரம் முன்வரிசைப் பணியாளர்களுக்கு மாநில அரசாங்கம் தலா 200 ரிங்கிட் மதிப்பிலான சுற்றுலாப் பற்றுச்சீட்டுகளை வழங்குகிறது.

நாட்டில் COVID-19 தொற்றுப் பரவத் தொடங்கியதில் இருந்து ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கும் மேல் அயராமல் உழைத்து வரும் முன்வரிசைப் பணியாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் நோக்கில் அவை வழங்கப்படுகின்றன.

குவாந்தானில் கட்டுப்பாடு!

பகாங் குவாந்தானில், இன்று தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை, எந்த பொது நிக்ழச்சிகளும் நடத்த அனுமதி இல்லை என, மாநில பேரிடர் செயற்குழு அறிவித்துள்ளது.

பொது மக்களுக்கான நேரடி சேவை முகப்புகளுக்கான நேரம் குறைக்கப்பட்டு, முன்பதிவு அடிப்படையில் அச்சேவைகள் தொடரும்.

அம்மாநிலத்தில் இன்னும் தீவிரமாக உள்ள 5 clusterகள் வாயிலாக COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்காமல் இருப்பதை உறுதிச் செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கிறிஸ்மஸ் - மிதமாக கொண்டாடுங்கள்!

COVID-19 தொற்றில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை என்பதை கருத்தில் கொண்டு, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை மிதமான அளவில் நடத்துமாறு  மலேசியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக, வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் என, மலேசியப் பொது மருத்துவர்கள் சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar ஆலோசனை கூறுகின்றார்.

"Walaupun Majlis tersebut kita adakan di rumah, ataupun di rumah keluarga kita, kita had kan bilangan pengunjung ataupun tetamu pada sesuatu masa jadi tidak la bersesak-sesak ataupun terlalu ramai. Dan di samping itu, kita mesti mengamalkan SOP dan norma baru seperti kerap membasuh tangan, memakai mask dan tidak bersentuhan secara fizikal"

பயணங்களை கட்டுப்படுத்தி, இயன்றவரை வீட்டிலேயே குடும்பத்துடன் அப்பெருநாளை மக்கள் கொண்டாடலாம் என்றும் அவர் கூறினார்.

கிறிஸ்மசுக்காக பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் பேரங்காடிகளுக்குச் செல்லும் பொது மக்கள், COVID-19 மீதான பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

அதன் தொடர்பில், Dr Zainal இந்த ஆலோசனையை வழங்கினார்.

“semasa kita melakukan shopping atau membuat persediaan untuk perayaan tersebut, kita boleh memilih premis yang kurang sesak atau masa yang sesuai untuk mengelakkan kesesakkan dan mendapat jangkitan Covid-19.” 

பொருட்கள் வாங்கச் செல்லும் பொது மக்களின் நலன் கருதி, பேரங்காடிகளில் கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகள் கொண்டு வரப்பட்டிருப்பதாக மலேசிய பேரங்காடிகள் சங்கமும் இதற்கு முன் கூறியிருந்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather