← Back to list
SWAB பரிசோதனை இல்லாமல் நாட்டுக்குள் நுழையலாம்!
Dec 16, 2020
வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மலேசியர்கள், SWAB பரிசோதனை இல்லாமல் நாட்டுக்குள் நுழையலாம்; ஆனால், அவர்கள் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொள்ள வேண்டும் என Datuk Seri Ismail தெரிவித்தார்.
இவ்வேளையில், வெளிநாட்டிலேயே அப்பரிசோதனையை முடித்துக் கொண்டு, அத்தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படும் மலேசியர்கள் நாடு வந்ததும் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றாரவர்.
நாட்டில் நேற்று புதிதாக ஆயிரத்து 772 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, அதில் ஆக அதிகமாக 696 சம்பவங்கள் கோலாலம்பூரை உட்படுத்தியுள்ளன.
நெரிசாலான பொது இடங்களில் சுவாசக் கவசம் அணிய வேண்டும்!
நெரிசலான பொது இடங்களில் மட்டுமே சுவாசக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob மீண்டும் தெளிவுப்படுத்தியிருக்கின்றார்!
ஒருவர் தனிமையில் இருக்கும் போதோ அல்லது ஒரு மீட்டர் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் போதோ சுவாசக் கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாரவர்.
உதாரணத்திற்கு உணவகத்தில் உணவு உண்ணும் போது கண்டிப்பாக சுவாசக் கவசம் அணிய முடியாது; ஆனால், தனிமனித இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார்.
சுவாசக் கவசம் அணிவது தொடர்பான SOP குறித்து, பொது மக்களில் பலருக்கு இன்னும் குழப்பங்கள் இருந்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.
அண்மையில், தனது வீட்டின் முன் இருந்த போது, சுவாசக் கவசம் அணியாததற்காக 65 வயது முதியவர் ஒருவருக்கு காவல் துறை ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்ததாக கூறி, சமூக வலைத்தளத்தில் பரவிய தகவல் குறித்து பேசினார்.
உண்மையில், அம்முதியவர், தனது வீட்டின் அருகாமையிலுள்ள பொதுப் பூங்காவில் சுவாசக் கவசம் அணியாமல் இருந்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, காவல் துறை பின்னர் தெளிவுப்படுத்தியிருந்தது.
சட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படும்!
தங்களது அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கு COVID-19 பரிசோதனை மேற்கொள்ள தவறும் முதலாளிகள் மீது எத்தகைய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, தேசிய சட்டத் துறை ஆராயும்!
அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கான கொரோனாப் பரிசோதனை கட்டாயமக்கட்ட டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி இதுவரை நாட்டில் மொத்தம் 17 ஆயிரம் பேர் பரிசோதிக்கபட்டுள்ளனர்.
அவர்களில், 550 பேருக்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவ்விவகாரத்தில் இன்னும் சில முதலாளிகள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருவதை, Datuk Seri Ismail Sabri குறிப்பிட்டார்.
கட்டுமானத் தள தங்குமிடங்களுக்கு SOP !
COVID-19 சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், கட்டுமானத் தளங்களில் தங்களது தொழிலாளர்களுக்கு தற்காலிக குடியிருப்புகளை அமைக்கும் முதலாளிகளுக்கு, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு SOPகளை தயார் செய்திருக்கிறது.
நெருக்கடிமிக்க தங்குமிட வசதி, அதனால் ஏற்படும் சுத்தமின்மை ஆகியவை காரணமாக கொரோனா சம்பவங்கள் அதிகரிப்பதை அமைச்சு சுட்டிக் காட்டியது.
2021 பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது!
மக்களவையில் மூன்றாம் கட்ட வாசிப்புக்கு பிறகு 2021 வரவு செலவு அறிக்கைக்கு ஆதரவளித்து, அதனை நிறைவேற்றிய MPகளுக்கு பிரதமர் Tan Sri Muhyiddin Yassin நன்றி தெரிவித்துள்ளார்.
COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியில், நாட்டின் வரவு செலவு அறிக்கை எந்த இடையூறுமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற மாமன்னரின் வலியுறுத்தலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதித்துள்ளனர் என்று பிரதமர் கூறினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather