← Back to list
KLலில் மீண்டும் உயர்ந்துள்ள Covid-19!
Dec 15, 2020
நாட்டில் இன்று ஆயிரத்து 772 புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
KL தான் ஆக அதிகமாக 696 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
அதற்கு அடுத்த இடத்தில் சிலாங்கூர் 503 சம்பவங்களையும், சபா 260 சம்பவங்களையும், பேராக் 110 சம்பவங்களையும் கொண்டிருக்கின்றது.
மூன்று புதிய மரணங்கள் பதிவாகி மரண எண்ணிக்கை 422ஆக உயர்ந்துள்ளது.
_______
வரும் திங்கட்கிழமை தொடங்கி வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பும் மலேசியர்களின் தனிமைபடுத்துதலுக்கான கால அவகாசம் 14 நாட்களிலிருந்து 10 நாட்களுக்குக் குறைக்கப்படுகின்றது.
அவர்கள் இருக்கும் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்குள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; நாடு வந்து சேர்ந்ததும் இங்கு அவர்கள் 7 நாட்களுக்குத் தனிமையில் வைக்கப்படுவர் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Dato Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
இருக்கும் நாட்டில் பரிசோதனை செய்து கொள்ள முடியாதவர்கள் மலேசியா வந்ததும் அதனை மேற்கொள்வர் என அமைச்சர் சொன்னார்.
______
Covid-19-னுக்கான கட்டாய தனிமைபடுத்துதலுக்கான கால அவகாசத்தை 14 நாட்களிலிருந்து 10 நாட்களுக்குக் குறைத்திருப்பது எந்த வித பாதிப்பையும் கொடுக்காது!
உலக நாடுகளில் இது ஏற்கனவே அமுலுக்குக் கொண்டு வரப்பட்டு வெற்றியடைந்திருப்பதைச் சுட்டிக் காட்டி மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் Datuk Dr Subramaniam Muniandy அவ்வாறு கூறியுள்ளார்.
எனவே தனிமைப்படுத்துதலுக்கான கால அவகாசத்தைக் குறைத்திருப்பது எந்த வித தொற்றுப் பரவலையும் கொண்டு வந்து விடாது என அவர் குறிப்பிட்டார்.
_____
தனது அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் 10 லட்சம் பின்தொடர்வோர் இருக்கும் முதல் மலாய் ஆட்சியாளாராக ஜொகூர் சுல்தான் Sultan Ibrahim Sultan Iskandar திகழ்கின்றார்.
அவர்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஜொகூர் மாநில மக்கள் இருப்பதாக Sinar Harian தகவல் கூறுகின்றது.
______
நாட்டில் சில மாநிலங்களில் இன்றிரவு எட்டு மணி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளாந்தான், மலாக்கா, சிலாங்கூர், ஜொகூர் ஆகிய மாநிலங்கள் அதிலடங்கும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather