Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கிள்ளானில் EMCO முடிவுக்கு வந்தது!

Dec 15, 2020


சிலாங்கூர் கிள்ளானில் தொழிற்சாலை ஒன்றை உட்படுத்தியிருந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob  அறிவித்துள்ளார்.

அங்கு புதிதாக பதிவாகும் கொரோனா சம்பவங்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதே அதற்கு காரணம்.

நவம்பர் 17ஆம் தேதி தொடங்கப்பட்ட EMCO-வை அடுத்து, ஐயாயிரத்து 805 கொரோனாப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு அத்தொற்று பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

வேலை வாய்ப்புத் திட்டம்!

COVID-19 சீற்றத்தை அடுத்து, சிங்கப்பூரில் வேலை இழந்த மலேசியர்கள் SOCSO அலுவலகங்களுக்குச் சென்று, அரசாங்கத்தின் MyFutureJobs அகப்பக்கம் வாயிலாக, புதிய வேலை வாய்ப்புகளை தேடுமாறு, மனித வள அமைச்சு வலியுறுத்தியிருக்கின்றது.

இவ்வாண்டு டிசம்பர் ஏழாம் தேதி வரை, ஏறக்குறைய 802 மலேசியர்கள், அதாவது சிங்கப்பூரில் வேலை இழந்தவர்களில் 5 விழுக்காட்டினர் மட்டுமே அந்த அகப்பக்கத்தில் பதிந்துக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு பதிந்துக் கொண்டவர்களில் 195 பேர் புதிய வேலை வாய்ப்பைப் பெற்றிருப்பதையும் அமைச்சு குறிப்பிட்டது.

இதனிடையே, நேற்று தொடங்கி இணையம் வழி நடைபெற்று வரும் 2020 ஜொகூர் PenjanaKerjaya வேலை வாய்ப்புத் திட்டத்திலும் பங்கேற்று பயனடையுமாறு அமைச்சு, பாதிக்கப்பட்ட மலேசியர்களை அறிவுறுத்தியிருக்கின்றது.

அத்திட்டத்தின் கீழ் மொத்தம் 30 நிறுவனங்கள் பங்கேற்றுள்ள நிலையில், ஆயிரத்து 500க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

ஆகக் கடைசி நிலவரப்படி, சிங்கப்பூரில் வேலை இழந்த மலேசியர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 346 பேர் என, சிங்கப்பூர் தரவுகள் காட்டுவதாக அமைச்சு கூறியது.

விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது!

தீயணைப்பு வீரர் Muhammad Adibபின் மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது நிறைவடைந்ததும் அதன் அறிக்கை தேசிய சட்டத் துறையிடம்  ஒப்படைக்கப்படும் என அமைச்சு கூறியது.

ஈராண்டுகளுக்கு முன், Subang Jayaவிலுள்ள கோவில் வளாகமொன்றில் நிகழ்ந்த கைகலப்பின் போது படுகாயமடைந்த Adib, 21 நாட்களுக்கு பிறகு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather