← Back to list
சீனாவின் தடுப்பூசி பாதுகாப்பற்றதா?
Dec 10, 2020
சீன நாட்டு தயாரிப்பிலான COVID-19 தடுப்பூசிகள் பாதுகாப்பற்றவை எனக் கூறி வெளியிடப்பட்டுள்ள தகவலை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
சீனா ஏற்கனவே, உலக சுகாதார நிறுவனம் WHOவுக்காக பல தடுப்பூசிகளை தயாரித்து வெளியிட்டிருக்கின்றது.
Influenza, போலியோ, Hepatitis A மற்றும் Japanese Encephalitis ஆகிவற்றுக்கான தடுப்பூசிகளே அதற்கு உதாரணம் என, சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியுள்ளார்.
எனவே, தடுப்பூசி தயாரிப்பதில் சீனா போதிய அனுபவத்தை கொண்டிருக்கின்றது என்பதையே, இந்த அடைவு நிலை காட்டுவதாக அவர் சொன்னார்.
சீன நாட்டு தடுப்பூசிகளுக்கு எதிராக சிலாங்கூரில் விநியோகிக்கப்பட்டு வரும் அச்சிடப்பட்ட தகவல்கள் அமைச்சின் கவனத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவில் பயன்படுத்தப்படும் COVID-19 தடுப்பூசி, பாதுகாப்பானதாகவும், தரமிக்கதாகவும் அதே வேளை நல்ல பலனளிக்கூடியதாகவும் இருப்பது உறுதிச் செய்யப்படும் என அமைச்சு ஏற்கனவே உத்தரவாதம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாத் தொற்று குறித்து கவனமாயிருங்கள்!
மாவட்டம் மற்றும் மாநிலம் விட்டுப் பயணிப்பவர்கள், COVID-19 பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு, சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah வலியுறுத்தியுள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் வாயிலாக, தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கையில் ஏற்படும் தாக்கத்தை சுகாதார அமைச்சு கண்காணித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
ஒருவேளை, இந்த தளர்வால் கொரோனாத் தொற்று அதிகரிக்குமேயானால், அம்முடிவை அமைச்சு மறு ஆய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் இன்னும் இரு வாரங்களுக்கு, புதிதாக பதிவாகும் தினசரி கொரோனா சம்பவங்கள் எண்ணிக்கை 845தில் இருந்து ஆயிரத்து 700 வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஆகக் கடைசியாக, நாட்டில் 959 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதில் ஆக அதிகமாக 277 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.
அதற்கடுத்து, சபாவில் 207 சம்பவங்களும், கோலாலம்பூரில் 129 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
மேசையைப் பொருத்து அமரலாம்!
உணவகங்களில் இனி ஒரு மேசையில் இத்தனைப் பேர் தான் அமர வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை!
மாறாக, மேசையின் அளவைப் பொருத்து வாடிக்கையாளர்கள் அமரலாம் என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அறிவித்துள்ளார்.
என்றாலும், ஒரு மீட்டர் தனிமனித இடைவெளி கட்டாயம் பின்பற்றப் பட வேண்டும் என்றாரவர்.
கோமன்வெல்த் அறவாரியத்தின் தலைவர்!
கோமன்வெல்த் அறவாரியத்தின் புதியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Dato சுதாதேவி KR வாசுதேவனுக்கு, வெளியுறவு அமைச்சர் Datuk Seri Hishammuddin Hussein வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்.
1966ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த அறவாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற, மலேசிய மற்றும் ஆசியாவின் முதல் நபராகவும் அவர் திகழ்வதாக அமைச்சர் சொன்னார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather