Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

AIDS நோய்க்கு மருந்து உண்டு; கவலை வேண்டாம்!

Dec 01, 2020


HIV கிருமிக்கு ஆளானவர்கள் வாழ்க்கையை வெறுப்பதும், தங்களின் எதிர்காலமே சீரழைந்துவிட்டதாக நினைப்பதும் முற்றிலும் தவறு!

AIDS நோய்க்கென மருந்துகளும் மருத்துவ முறைகளும் இருப்பதாகக் கூறிய USMமின் AIDS நடவடிக்கை மற்றும் ஆய்வுக் குழு நிகழ்ச்சி நிர்வாகி திரு Jagathesan குப்புசாமி, அவற்றை முறையாக பின்பற்றி வந்தால், நிச்சயம் அந்நோயிலிருந்து மீண்டு வரலாம் என கூறுகின்றார்.

எனவே பயம் வேண்டாம்; குடும்பம் நண்பர்கள் ஆகியோரின் ஆதரவு இருந்தாலே யாராக இருந்தாலும் நிச்சயம் AIDSசிலிருந்து மீண்டும் வர முடியும் என ஜகதீசன் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று அனுசரிக்கப்படும் உலக AIDS தினத்தை முன்னிட்டு, AIDS குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் தவறான கண்ணோட்டம் குறித்து கேட்கப்பட்ட போதும், ஜகதீசன் அவ்வாறு பதிலளித்தார்.

_______

நாளை தொடங்கி ஊழியர் சேம நிதி வாரிய அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படவிருக்கின்றன.

காலை மணி 8.30 தொடங்கி மாலை 4.30 வரை எல்லா KWSP அலுவலகங்களின் முகப்புகளும் திறந்திருக்கும்.

எனினும் அம்முகப்புகளுக்கு செல்லும் முன் பொது மக்கள் முன்கூட்டியே KWSPயின் அகப்பக்கத்தில் தங்களின் அலுவல்களைப் பதிந்து கொண்டிருக்க வேண்டும்.

தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட SOPக்கள் எந்நேரமும் கருத்தில் இருக்க வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

________

Covid-19 பெருந்தொற்று நாட்டு மக்களையே மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கின்றது.

குறிப்பாக ஜொகூரில் இவ்வாண்டு மனநில கிளினிக்குகளில் மன நல பரிசோதனை செய்து கொள்ள முன்வந்தோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அம்மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் , R Vidyananthan தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஜூன் மாதம் 32 பேரும் ஜூலை மாதம் 46 பேரும் மட்டுமே அப்பரிசோதனையைச் செய்து கொண்டுள்ளனர்.

ஆனால் இவ்வாண்டு ஆகஸ்டிலோ 678 பேர் மனநில பரிசோதனை செய்து கொண்டிருந்த தகவலையும் அவர் வெளியிட்டார்.

_______

நாட்டில் இன்று 1472 புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன!

1552 பேர் அத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மூன்று புதிய மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து, மரண எண்ணிக்கை 363ஆக உயர்ந்துள்ளது.

_______

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் தர செயல்பாட்டு நடைமுறைகளை மீறியதற்காக நாடு முழுவதும் நேற்று 311 பேர் கைதாகியுள்ளனர்!

அவர்களில் 306 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டு, ஐவர் தடுத்து வைக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகமானோர் சுவாசக் கவசம் அணியாததற்காகக் கைதாகியுள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather