← Back to list
COVID-19: தடுப்பூசி குறித்த அறிக்கை விரைவில் கிடைக்கும்!
Dec 01, 2020
COVID-19 தடுப்பூசியை தயாரித்து வரும் 12 நிறுவனங்களில் குறைந்தது ஒரு நிறுவனமாவது, அடுத்த வாரத்திற்குள் தனது முதல் மருத்துவ அறிக்கையை வெளியிடும் என, சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah
அந்நிறுவனங்கள் அனைத்தும் தற்போது தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால், அதில் 10 நிறுவனங்களுடன் மட்டுமே தடுப்பூசி குறித்து மலேசிய பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், நாட்டில் தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களை காட்டிலும், அத்தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று ஆயிரத்து 212 கொரோனா சம்பவங்கள் பதிவான வேளை, ஈராயிரத்து 112 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
இன்னும், 10 ஆயிரத்து 578 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Meru மக்களுக்கு COVID-19 பரிசோதனை!
சிலாங்கூர் கிள்ளான் மேரு குடியிருப்பாளர்களிடையே, நாளை இலக்கு வைக்கப்பட்ட COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
Teratai cluster-ரை உட்படுத்திய COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதே அதற்கு காரணம் என மாநில Menteri Besar தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள Top Glove தொழிற்சாலை தொழிலாளர் தங்கும் விடுதிகளில் அவ்வெண்ணிக்கை அதிகம் காணப்படுவதால், COVID-19 மீதான மாநில சிறப்பு செயற்குழு அப்பரிசோதனை குறித்து முடிவெடுத்ததாக, Datuk Seri Amirudin Shari கூறியுள்ளார்.
அப்பரிசோதனையில், Taman Meru 3, Taman Seri Meru, Taman Bayu மற்றும் Taman Desa Permai பகுதி மக்கள் உட்படுத்தடுவார்கள் என்றாரவர்.
அத்தொழிற்சாலை தங்கும் விடுதிகளுக்கான EMCO டிசம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாப் பெருந்தொற்றை கட்டுப்படுத்த தங்களது தரப்பு போதுமான ஒத்துழைப்பு வழங்கும் என Top Glove நிறுவனம் கூறியுள்ளது.
சம்பள உதவித் தொகைத் திட்டம்!
அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கிய சம்பள உதவித் தொகைத் திட்டம் 2.0 வாயிலாக, 61 ஆயிரத்து 382 நிறுவனங்கள் பயனடைந்திருப்பதாக மனித வள அமைச்சர் Datuk Seri M. Saravanan தெரிவித்துள்ளார்.
இதன் வாயிலாக, நவம்பர் 6 தேதி வரை, 6 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தத்தம் பணிகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் தகவலையும் அவர் உறுதிப்படுத்தினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather